Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
லியொனார்டோ டா வின்சி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

லியொனார்டோ டா வின்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

லியொனார்டோ டா வின்சி
லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். விசேடமாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை

இவருடைய வாழ்க்கை ஜோர்ஜியோ வசாரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. லியொனார்டோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர், தாய் கத்தரீனா ஒரு விவசாயிகள் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை.

இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்குவர முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "லியனார்டோ டி செர் பியெரோ டா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் லியனார்டோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "லியனார்டோ" என்றோ அல்லது "நான் லியனார்டோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "டா வின்சிகள்" என்றில்லாமல், "லியொனார்டோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 தானே வரைந்த அவரது உருவப்படம், ca. 1513
தானே வரைந்த அவரது உருவப்படம், ca. 1513

இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் சுதந்திரமான ஒவியர் ஆனார்.

1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495ல், சார்ள்ஸ் VIII இன்கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, லியொனார்டோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, லியொனார்டோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.

புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்சியைச் சந்தித்தார்.

1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஒவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.

1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

[தொகு] கலை

லியோனார்டோ டா வின்சி: கடைசி விருந்து (1498)
லியோனார்டோ டா வின்சி: கடைசி விருந்து (1498)

லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.

லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.

மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.

லியோனார்டோ டா வின்சி: மோனா லிசா (1503-6)
லியோனார்டோ டா வின்சி:
மோனா லிசா (1503-6)

புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.


[தொகு] அறிவியலும், பொறியியலும்

இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.

அறிவியல் சம்பந்தமான இவரது அணுகுமுறை அவதானிப்பு சார்ந்தது. விபரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். சோதனைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விபரமான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், லியோனார்டோ என்ற விஞ்ஞானி அக்கால அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டார்.


விட்ருவியன் மனிதன்: லியொனார்டோ டா வின்சி draws the human body
விட்ருவியன் மனிதன்: லியொனார்டோ டா வின்சி
draws the human body

[தொகு] வெளி இணைப்புகள்

நிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com