பிரேசில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரேசில் (República Federativa do Brasil) தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதும் ஆகிய நாடாகும். உலகிலேயே ஐந்தாம் பெரிய நாடு பிரேசில். பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, ஈக்வெடார், சிலி தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீசிய மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா. சா பாலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்கள்.
[தொகு] விளையாட்டுக்கள்
இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும் | |
அர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · ஈக்வெடார் · கயானா · பனாமா* · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் * · உருகுவே · வெனீசூலா | |
சுதந்திரமற்றவை: அருபா (ஒல்லாந்து )* · போக்லாந்து தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) · பிரெஞ்சு கினீயா · நெதர்லாந்து அண்டிலிசு* · தெற்கு யோர்சியா மற்றும் தென் சன்விச் தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) |
|
* வேறு இடங்களில் வட அமெரிக்காவோடு சேர்த்து நோக்கப்படும் |