சிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென் அமெரிக்காவிலே அர்ஜென்ட்டீனா நாட்டுக்கு மேற்காக உள்ள ஒரு நாடு சிலி . இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.