திருக்குர்ஆன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலகிலுள்ள அனைத்து மதங்களும் தங்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜுர், சாம, அதர்வணம், பகவத்கீதை. மனுஸ்மிரிதி போன்றவைகளையும், கிறிஸ்தவமதம் பைபிளையும் சீக்கிய மதம் குரு கிரந்தத்தையும் தங்கள் வேதங்களாக கூறுகின்றன. திருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மாத்திரம் வேத நூல் என்று பிற மதத்தினர் கூறினாலும், குர்ஆன் எங்களுக்கு மட்டுமேயான வேத நூல் என்று முஸ்லீம்கள் கூறினாலும் திருக்குர்ஆன் உலகத்தில் வாழும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு அருளப்பட்டிருக்கும் வேதமாகும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
"ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டது." (அல்குர்ஆன் 2:185)
ஒரு சாரார் மட்டுமே வேதத்தைக் கற்றுப் பயன்பெற முடியும் என்ற தடை இஸ்லாத்தில் இல்லை. திருக்குர்ஆனை எல்லாரும் படித்து பயன்பெறலாம்.
குடும்பத்தாருடன் இருந்து குர்ஆனை ஓதி பயன் பெறலாம். ஆபாச நடையோ அல்லது இப்படி இருக்கிறதே என வியப்பூட்டும் விரசமான நிலையோ கிடையாது.
மனிதக் கரங்களால் கால சூழ்நிலைகளுக்கேற்ப சில கருத்துக்களைச் சேர்த்தும், நீக்கியும், மாற்றியும், உண்மை நிலையை இழந்து சீரழியும் பிற வேதங்களைப் போல் இல்லாமல் அதன் மூல மொழியில் அது எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமுமில்லாமல் இன்றளவும் திகழ்வது குர்ஆனின் தனிச் சிறப்பு.
திருக்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துவதாக சொல்கிறது.
(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன் 3:3)
இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான் என்று கூறுகிறது.
"நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(அல்குர்ஆன் 15:9)"
குர்ஆன் இறைவேதமே எனப்பிரகடனம் செய்கிறது.
"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா! (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(4:82)"
பொருளடக்கம் |
[தொகு] குர்ஆன் பற்றிய சில குறிப்புகள்
திருக்குர்ஆன் அத்தியாயங்களின் அளவை கவனித்து நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
1) (அத்திவால்) நீளமானவை: அவை ஏழு. 1)பகரா 2)ஆல இம்ரான் 3)அந்நிஸா 4)அல்மாயிதா 5)அல் அன்ஆம் 6)அல் அஃராஃப் 7)அல் அன்ஃபால், அத்தவ்பா (இரண்டும் இணைந்து)
2) (அல்மிஊன்) நூறுகள்: அவை நூறு வசனங்களை விட சற்று அதிக வசனங்களைக் கொண்ட சூராக்கள். அல்லது நூறு வசனங்களுக்கு சற்று குறைவான வசனங்களை கொண்டவை.
3) (அல் மஸானீ) மீண்டும் மீண்டும் ஓதப்படுபவை: (முதல் இரண்டு வகைகளை காட்டிலும் அதிகமாக திரும்பத்திரும்ப இவை ஓதப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரண்டாவது வகையை விட குறைந்த எண்ணிக்கையிலான வசனங்களை கொண்டவை.
4) (அல் முஃபஸ்ஸல்) பிரிக்கப்பட்டது: (இந்த வகை சூராக்கள் அதிகமான பிஸ்மில்லா(ஹ்)"க்களால் பிரிக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளன). இவ்வகை, மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஒன்று, (திவாலுல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நீளமானவை - அவை சூரத்துல் ஹுஜ்ராத்திலிருந்து சூரத்துல் புரூஜ் வரையிலாகும்.
இரண்டு, (அவ்ஸாத்துல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நடுத்தரமானவை - இவை சூரத்துல் புரூஜ் முதல் சூரத்துல் ளுஹா வரையிலாகும்.
மூன்று, (கிஸாருல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் சுருக்கமானவை - இவை சூரத்துல் ளுஹா முதல் குர்ஆனின் இறுதி (அந்நாஸ்) வரையிலாகும்.
குர்ஆனின் சூராக்கள்(அத்தியாயங்கள்)எண்ணிக்கை 114 (நூற்றி பதினான்கு). 004907144882203 dieselstrass in steinheim murr vernichten allllllllllllllllles குர்ஆனை ஓதுவதற்கு எளிதாக கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
ஜுஸ்வுக்கள் (பாகங்கள்) - 30 (முப்பது)
ஹிஸ்புக்கள் (குழுக்கள்) - 60 (அறுபது) (அதாவது இரண்டு ஹிஸ்புக்கள் சேர்ந்து ஒரு ஜீஸ்வு ஆகும்)
ருப்உக்கள் (கால் பகுதிகள்) - 240 இருநூற்றி நாற்பது (அதாவது நான்கு ருப்உக்கள் சேர்ந்து ஒரு ஹிஸ்பு ஆகும்)
குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய முதல் வசனம் 96வது அத்தியாயத்தில் 1 முதல் 5 வசனங்கள் வரை
குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய இறுதி வசனம் 2: 281
முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹா
இறுதி அத்தியாயம் சூரத்துன் நாஸ்
மக்கீ அத்தியாயங்கள்: ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை பற்றி விவரிக்க கூடியது
மதனீ அத்தியாயங்கள்: சட்டதிட்டங்கள், சமுதாயப் பிரச்சினைகள், வாரிசுரிமை, ஆட்சி முதலியன
[தொகு] குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது
மக்கத்து மாந்தர்களின் மூடப்பழக்க வழக்கங்களால் வெறுப்புற்று அமைதியை நாடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஹிரா மலைக் குகையில் இறைவனைத் தியானித்துக் கொண்டிருக்கும் போது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து வஹீ (தூதுச்செய்தி) கொண்டு வந்து நபிகளிடம் நீர் ஓதுவீராக எனக் கூற நபிகளார் எனக்கு ஓதத் தெரியாது எனக் கூறினார்கள். மீண்டும் ஜிப்ரீல்(அலை) நபி(ஸல்) அவர்களிடம் உமதிரட்சகனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! என நபிகளை இறுகக் கட்டியணைத்துக் கூற நபிகளார் ஓதினார்கள்.
இவ்வாறு குர்ஆனின் 96: 1 முதல் 5 வசனங்கள் முதலில் இறங்கின. வஹீ அருளப் பெற்ற நபிகளார் மிகுந்த பயத்துடன் வீடு திரும்பினார்கள். அவர்களை மனைவி கதீஜா(ரலி) அவர்கள் "நீங்கள் நாதியற்றவர்களை சுமக்கிறீர்கள், தேவையுள்ளோருக்கு உதவி புரிகிறீர்கள், பசித்தோருக்கு உணவளிக்கிறீர்கள், உற்றார் உறவினரை உபசரிக்கிறீர்கள். எனவே இறைவன் உங்களை கைவிட மாட்டான்" என ஆறுதல் கூறி தேற்றிய பின் தம் உறவினர்களில் ஒருவரான வரகா என்ற முதியவரிடம் (முன் வேதங்களை கற்றரிந்தவர்) அழைத்துச் சென்று கூற வரகா நபிகளை நோக்கி, நீர் நபிதான். என உறுதிப்படுத்திக் கூறினார். மேலும் பின்னர் ஒரு காலம் வரும் அக்காலத்தில் நீர் உம் ஊரை விட்டு விரட்டப்படுவீர் என முன்னறிவிப்புச் செய்தார்.
[தொகு] குர்ஆன் பாதுகாக்கப்பட்ட விதம்
1. நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். 2. நபித்தோழர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தனர். 3. "காத்திப் வஹி" என்னும் எழுத்தாளர்கள் ஏடுகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட குர்ஆனை முழுமையாக மனதில் சுமந்தவர்களாக இருந்தார்கள்.
...ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபியவர்களை சந்திப்பார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள். (புகாரி 4997)
நபித்தோழர்களில் பலரும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். அவர்களின் பெயர்கள்:
நான்கு கலீஃபாக்கள், தல்ஹா, ஸஃத், இப்னு மஸ்ஊத், ஹீதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇப், அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், அப்துல்லாஹ் பின் உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபாதா பின் அஸ்ஸாமித், முஆத், முஜம்மிஃ பின் ஜாரியா, ஃபுளாலா பின் உபைத், மஸ்லமா பின் முக்லித்.
இவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பே மனனம் செய்தலை நிறைவு செய்தார்கள். இந்த விபரங்கள், அபூ உபைத் அல் காஸிம் அவர்களின் "அல்-கிராஆத்" என்ற நூலை மேற்கோள்காட்டி, ஸுயூத்தி அவர்களின் "அல்இத்கான்" பாகம் 1, பக்கம் 72ல் இடம் பெற்றுள்ளது.
[தொகு] குர்ஆன் திரட்டப்பட்ட விதம்
நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு அலி, முஆவியா, உபய் பின் கஃப், ஜைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்திருந்தார்கள். வஹி இறங்கியவுடன் எழுதுபவர்களை அழைத்து அதனை எழுதும் படி கட்டளையிடுவார்கள்.
அதேபோல் நபித்தோழர்களில் பலரும் தாங்கள் ஓதுவதற்காக தாங்களாக முன் வந்து குர்ஆனை எழுதிவைத்திருந்தார்கள்.
இப்படி குர்ஆன் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஏட்டில் முழுமையாக எழுதப்படவில்லை. அதாவது சிலரிடம் சில சூராக்களும் வேறு சிலரிடம் வேறு சில சூராக்களும் என்கிற நிலையே இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையிலேயே நபியவர்கள் மரணமடைந்தார்கள்.
நபியின் மரணத்திற்குப் பின்பு, அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி பனிரெண்டாம் வருடம் நடைபெற்ற யமாமா யுத்தத்திற்கு பின்பு குர்ஆன் ஒரே ஏட்டில் எழுதப்பட்டது. அதுபற்றிய விபரம்:
ஜைத் பின் ஜாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர்(ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள். யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடலை ஸஜத்(ரலி) அவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்].
ஜைத்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.
அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி 4986)
அப்பிரதிகளில் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இன்னும் உள்ளது.
குர்ஆனை ஒன்று திரட்டுவதில் ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் மிக கண்ணும் கருத்துமாக இருந்து நுட்பமான வழி முறையை கையாண்டிருக்கிறார்கள் என்பது மேற்கூறிய செய்திகளால் இருந்து தெரியவருகிறது. அதாவது மனப்பாடத்திலிருந்து மட்டும் அவர்கள் கேட்டு எழுதவில்லை. எல்லா வசனங்களையும் எழுத்து வடிவிலும் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்கள். அதில் வெறும் இரண்டு வசனங்கள் மாத்திரம் பலரிடம் மனனத்தில் இருந்தாலும் கூட அபூ குஜைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதை கவனிக்கவும்.
[தொகு] பின்னடைவில் தமிழுலகம்
தமிழ் முஸ்லிம்களுக்கு தாய் மொழியில் அல்குர்ஆன் மொழியாக்கம் கொடுக்கப்பட்டது எப்போது? தமிழுலகில் முதன்முதலாக வெளிவந்த தர்ஜுமத்துல் குர்ஆன் மதிப்பிற்குரிய அறிஞர் அ. கா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் வெளியீடாகும். 1943-ல் மொழி பெயர்ப்பு நிறைவு செய்யப்பட்டு, 1949 மே மாதம் முதல் தேதி, 1368 ரஜப் பிறை 2-ம் நாள் அன்று வெளிவந்தது.
[தொகு] சில ஐயங்களும் தெளிவும்
1. திருக்குர்ஆனில் முதலில் இறங்கிய வசனம் முதலில் இல்லையே என்பது சிலரின் ஐயம்.
குர்ஆனின் வசனங்கள் கால சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குகேற்ப ஒன்றன்பின் ஒன்றாக இறங்கியவைகளாகும்.
இந்திய அரசியல் சாசன சட்டம் 1, 2, 3 எனத்துவங்கி அநேக சட்டப் பிரிவுகள் உள்ளன. ஒரு கொலை நடந்து விட்டால் அதற்கு 302, 307 சட்டப்பிரிவுகள் கொலையாளி மீது சுமத்தப்படுகின்றது. அதன் படி அவன் தண்டனை பெறுகிறான். இதுபோல களவு, வழிப்பறி, கற்பழிப்பு, விபச்சாரம் என பல குற்றங்களுக்கு வெவ்வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. அரசியல் சட்டம் இயற்றிய பின் முதலில் கொலை நடந்தால் கொலைக்குரிய சட்டப்பிரிவே நடைமுறைக்கு வரும் 1-வது சட்டப்பிரிவு நடைமுறைக்கு வராது. இதனைப் புரிந்து கொண்டால் மேற் கூறிய ஐயம் எழுவதில்லை.
2. குர்ஆனின் வசனங்கள் சிலர் 6666 என்றும் சிலர் 6236 என்றும் சிலர் வேறு எண்ணையும் கூறுவர். அப்படியானால் ஏன் இப்படி வேறுபாடு? என்ற ஐயம் சிலருக்கு உண்டு.
சில இடங்களில் ஒரு வசனத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு வசனம் எனவும் சில இடங்களில் இரண்டு வசனத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு வசனம் எனவும் எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான், தவிர குர்ஆனில் எந்த மாறுபாடும் இல்லை. 6666 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுதான் குர்ஆன், 6236 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுவே குர்ஆன்.
3. இஸ்தான்புல்லில் இன்று காணப்படும் குர்ஆனின் பிரதி உஸ்மான்(ரலி) ஆட்சி காலத்தில் விநியோகிக்கப்பட்டது. தற்பொழுது உள்ள குர்ஆனின் பிரதியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது அதனை நம்மால் படிக்க இயலாமல் குறியீடுகளின்றி காணப்படுகின்றது. அப்படியானால் எந்த மாற்றமும் இல்லாமல் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என்பதன் விளக்கம் என்ன?
இதனை விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அன்று ஓலைச்சுவடிகளில் எழுதியிருந்தார். திருக்குறளின் மூலப் பிரதி சரஸ்வதி மகாலில் உள்ளது. அதனை நாம் படிக்க முயன்றால் படிக்க வியலாது. காரணம் அந்நாளில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவம் மாறுதலடைந்து இன்று தமிழ் மொழியின் வரி வடிவம் வேறு நிலையில் உள்ளது. ஆனால் ஒலி வடிவம் ஒன்றே. தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துக்களின் னை, ணை, லை போன்ற எழுத்துக்கள் சிறிது காலத்துக்கு முன்பு வேறு வடிவத்தில் இருந்ததை யாவரும் அறிவர். ஆக எழுத்துக்களின் வரி வடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருப்பதைப் போல் குர்ஆனின் அரபி மொழி வரிவடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருக்கின்றது. குர்ஆனின் அகர, உகர, இகர குறியீடுகள் இட்டவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னும் வட்டமிட்டிருப்பது பிந்திய காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், குர்ஆனை 30 தினங்களில் ஓதுவதற்கு ஏதுவாக சமமாக 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஜுஸ்உ (பாகம்) எனப் பெயரிடப்பட்டது. 7 நாட்களில் ஓதுவதற்கு வசதியாக மன்ஸில் என 7 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டது இவையெல்லாம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளே.