மாஸ்கோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாஸ்கோ ரஷ்ய நாட்டின் தலைநகரமாகும். இது மோஸ்க்வா நதியின் கரையில் அமைந்துள்ளது. ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும்.மாஸ்கோ றுசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. றுசிய பேரரசர்கள் அல்லது ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டஸ்பேக்கை தலை நகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் றுசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவியத் றுசியாவின் தலை நகராகவும் மாஸ்கோவே விளங்கியது. 1960 ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது. 1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] சோவியத் காலத்தில
சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. 90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது. இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது. 1992 ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
[தொகு] சனத்தொகை
மாஸ்கோ சுமார் 8,304,600 அளவான மக்கள் தொகையை கொண்டுள்ளது. நகர சனத்தொகையில் பெரும்பாண்மையாக றுசியர்களே உள்ளனர், இதைவிட யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களே பெரும்பாண்மையாக இருந்த போதும் யூத மதம், இஸ்லாம் போன்ற மதங்களும் பின்பற்றப்படுகின்றன. 1970-1990 இடைப்பட்ட காலத்தில் நகரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சுமார் 1.21 இல் இருந்து 0.26 வீதமாக வீழ்ச்சி அடைந்தது.
[தொகு] இரண்டாம் உலகப்போரில்
1939 – 1945 வரை சோவித் படைகளின் தலமைப்பீடமாக மாஸ்கோ விளங்கியது. 1941 அக்டோபரில் ஜேர்மன் நாசி படைகள் மாஸ்கோ நகரை நெருங்கியபோதும் றுசியப்படைகளின் எதிர் தாக்குதலால் பின்வாங்கிச்சென்றனர்.
[தொகு] இவற்றையும் காணவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- Official Moscow Administration site
- Committee for Tourism of Moscow City Government
- Current time in Moscow
- History of Moscow
- http://www.bestofrussia.ca
- Moscow Life - Moscow Travel Guide
- Moscow Metro Photos - Panoramic Virtual Tour
- Moscow attractions (travel company)
- Moscow Weather Forecast
- Red Square, Moscow Webcams
- Google Maps: Moscow (satellite images)
- Travel to Moscow - Moscow hotels booking, webcams, photos.
- Exile's field guide to Moscow for foreigners - Don't take it too seriously
[தொகு] மேலதிக தகவலிற்கு
- Brzezinski, Matthew. Casino Moscow: A Tale of Greed and Adventure on Capitalism's Wildest Frontier. Free Press, 2001
- Dutkina, Galina. Moscow Days: Life and Hard Times in the New Russia. Trans. Catherine Fitzpatrick. Kodansha America, 1995, ஒரு ஊடகவியலாளனின் பார்வையில்
- Richardson, Paul E. Moscow Business Survival Guide. 3rd ed. Rough Guides, 2001.
உலகின்மிகப்பெரிய நகரங்கள் |
||
வரிசை |
நகரம் |
நாடு |
1 |
டோக்கியோ |
யப்பான் |
2 | மெக்சிகோசிட்டி | மெக்சிக்கோ |
3 | சா போலோ | பிரேசில் |
4 | நிவ்யார்க் |
ஐக்கியஅமேரிக்கா |
5 | மும்பாய் | இந்தியா |
6 |
லாஸ்ஏஞ்ஜல்ஸ் |
ஐக்கியஅமேரிக்கா |
7 | கொல்கத்தா | இந்தியா |
8 | சங்காய் | சீனா |
9 | டாக்கா | வங்காளதேசம் |
10 | டெல்லி | இந்தியா |
மூலம் அமேரிக்கசனத்தொகைகணக்கெடுப்புப்பிரிவு* 2000 ம் ஆண்டில் |