வார்ப்புரு:Mainpagefeature மாதிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதற்பக்கக் கட்டுரைகள் சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியப் பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. |
செய்திகளில் பேராசிரியர். முகமது யூனுஸ் வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். நுண்கடன் எனும் திட்டத்தை நிறுவனரும் நடைமுறைப்படுத்தியவருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார். பான் கி மூண், தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராக ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதய பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்பார். இவர் ஜுன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். |