பெரிய ஓக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரிய ஓக் வார்ப்புரு:StatusExtinct |
||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அறிவியல் வகுப்புப்பிரிவு | ||||||||||||||
|
||||||||||||||
Binomial பெயர் | ||||||||||||||
பிங்குயினஸ் இம்பென்னிஸ் |
75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் (பிங்குயினஸ் இம்பென்னிஸ் அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஓக்குகளிலும் பெரியதாகும். குறைந்தது 8 ஆம் நூற்றாண்டிலிருந்தாவது இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன.
பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.
இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. எனைய ஓக்குகளைப் போல, பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன.
பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படையாகும். தென்னரைக் கோளத்தில் பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர்.
பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.