பென்குயின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பென்குயின்கள் (order ஸ்பெனிசிபோர்மெஸ், குடும்பம் ஸ்பெனிசிடே) தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.
பென்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பென்குயின் (Emperor Penguin) ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதிலும் கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின்களே (தேவதைப் பென்குயின் என்றும் அழைக்கப்படுவதுண்டு) மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோ வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோ கூடக் காணப்படுகின்றன.
பென்குயின்கள், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், Eocene சகாப்தத்தில் உருவாகின. Eocene சகாப்தத்தைச் சேர்ந்த Palaeeudypteகள், Miocene சகாப்தத்தைச் சேர்ந்த Pachydypteகள் மற்றும் இன்று அழிந்துபோன பெரிய ஓக்குகள் போன்ற பறவைகள் நவீன பென்குயின்களை ஒத்துள்ளன. ஏனைய பறவை orderகளுக்கும் பென்குயின்களுக்கும் இடையிலான இணைப்பு பற்றி இதுவரை எதுவும் தெரியவரவில்லை. பென்குயின்களுக்கும், பெட்றெல் (petrel)களுக்கும் தூரத்து உறவு இருப்பதாக அனுமானிக்கப்பட்டாலும், இது நிரூபிக்கப்படவில்லை. அறியப்பட்ட எல்லா தொல்லுயிர் எச்சப் பென்குயின்களும் பெரியவை எனினும், நவீன சக்கரவர்த்தி பென்குயின்களிலும் பெரியவை அல்ல. எல்லாமே தென் அரைக் கோளத்தில் வாழ்ந்தவையே.
[தொகு] உடற்கூறு
பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாக இசைவாக்கம் பெற்றுள்ளன. Flipper களாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் சிறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவற்றின் இறகுகளிடையே ஒரு படைக் காற்று இருப்பதால், நீரில் மிதப்பதற்கு இலகுவாக உள்ளது. இதனால் தான் நீரில் சுழியோடும் பென்குயினின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள இக்காற்றுப் படலம், அத்லாந்திக்கின் குளிரில் உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை.
எல்லாப் பென்குயின்களும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், கடும் நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற் பகுதியையும் கொண்டவை. இது உருமறைப்புக்காகவாகும். கொல்லும் திமிங்கிலம் அல்லது சிறுத்தை நீர்நாய் போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம்.
சுழியோடும் பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் சுழியோடுவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு சுழியோட்டமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்குச் சுழியோடவும் அவற்றால் முடியும். பெரிய சக்கரவர்த்திப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது "தொபோகானிங் (tobogganing)" என அழைக்கப்படுகின்றது.
இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை.
[தொகு] வகைபிரிப்பு
ORDER ஸ்பெனிசிபோர்மெஸ்
- குடும்பம் ஸ்பெனிசிடே
- அரச பென்குயின், அப்டெனோடைற்ஸ் பட்டகோனிக்கஸ் (Aptenodytes patagonicus)
- சக்கரவர்த்தி பென்குயின், அப்டெனோடைற்ஸ் போர்ஸ்ட்டேரி (Aptenodytes forsteri)
- கெண்டூ பென்குயின், பைகோசெலிஸ் பப்புவா (Pygoscelis papua)
- அடெலீ பென்குயின், பைகோசெலிஸ் அடெலியே (Pygoscelis adeliae}
- Chinstrap பென்குயின், பைகோசெலிஸ் அண்டார்ட்டிக்கா (Pygoscelis antarctica)
- ராக்ஹோப்பெர் பென்குயின், இயுடைப்டெஸ் கிறிசோகொம் (Eudyptes chrysocome)
- பியோர்லாண்ட் பென்குயின், இயுடைப்டெஸ் பச்சிரிஞ்சஸ் (Eudyptes pachyrhynchus)
- Snares பென்குயின், இயுடைப்டெஸ் ரோபஸ்டஸ் (Eudyptes robustus)
- நிமிர்-crested பென்குயின், இயுடைப்டெஸ் ஸ்கிளாட்டேரி (Eudyptes sclateri)
- மக்கரோனி பென்குயின், இயுடைப்டெஸ் கிரிசோலோப்பஸ் (Eudyptes chrysolophus)
- மஞ்சட்கண் பென்குயின், மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes)
- சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), இயுடைப்துலா மைனர் (Eudyptula minor)
- ஆபிரிக்கப் பென்குயின், ஸ்பெனிஸ்கஸ் டெமெர்சஸ் (Spheniscus demersus)
- மகெலனிக் பென்குயின், ஸ்பெனிஸ்கஸ் மகெலனிக்கஸ் (Spheniscus magellanicus)
- ஹும்போல்ட்ற் பென்குயின், ஸ்பெனிஸ்கஸ் ஹொம்போல்ட்ற்றி (Spheniscus humboldti)
- கலப்பகொஸ் பென்குயின், ஸ்பெனிஸ்கஸ் மெண்டிகுலஸ் (Spheniscus mendiculus)