தாஜ் மஹால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாஜ் மஹால், இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலையும் சேர்த்துக்கொள்வதுண்டு. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] கறுப்பு நிறத் தாஜ் மஹால்
தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காண்ப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ் மஹாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ் மஹாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.