யமுனை ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இவ்வாறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.