முக்கோண எண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு முக்கோண எண் என்பது ஒரு சமபக்க முக்கோண வடிவில் ஒழுங்குபடுத்தத்தக்க ஒரு எண்ணாகும். (மரபின்படி, முதலாவது முக்கோண எண் 1 ஆகும்.):
1:
+ x
3:
x x + + x x
6:
x x x x x x + + + x x x
10:
x x x x x x x x x x x x + + + + x x x x
15:
x x x x x x x x x x x x x x x x x x x x + + + + + x x x x x
21:
x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x + + + + + + x x x x x x
இங்கே ஒவ்வொரு வரிசையும் அதற்கு முன்னுள்ள வரிசையைக்காட்டிலும் ஒரு அலகு கூடுதலாக இருப்பதைக் காட்டுகிறது. இதன்மூலம் முக்கோண எண்ணென்பது அடுத்தடுத்துவரும் integer களின் கூட்டுத்தொகைக்குச் சமன் என்பது விளங்குகிறது.
n ஆவது முக்கோண எண்ணுக்குரிய தொடர்பு ½n(n+1) அல்லது (1+2+3+...+ n-2 + n-1 + n) என்பதால் தரப்படும்.
இது binomial coefficient
இரண்டு அடுத்தடுத்த முக்கோண எண்களின் கூட்டுத்தொகை சதுர எண் ஆகும். இது கணித ரீதியாகப் பின்வருமாறு காட்டப்படலாம்: nஆவதும், (n-1) ஆவதும் முக்கோண எண்களின் கூட்டுத்தொகை {½n(n+1)} + {½(n-1)n}. இது பின்வருமாறு சுருக்கப்படுகிறது (½n2+½n) + (½n2-½n), அதாவது n2. இன்னொருமுறையில், வரைபுவழியாகவும் பின்வருமாறு காட்டப்படலாம்:
x + + +
x x + +
x x x +
x x x x
x + + + +
x x + + +
x x x + +
x x x x +
x x x x x
மேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- சதுர எண்
- பல்கோண எண்
- முக்கோண சதுர எண்