கிடைப்பருமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்ய முடியாத அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை(Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் சமூகத்தின் இலக்குகள் சகலதும் ஒரே சமயத்தினில் பூர்த்தி செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது.ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ரொபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வருமாறு:
மாற்று உபயோகம் உள்ள கிடைபருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்யும் மனிதநடத்தையினை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)
[தொகு] இவற்றினையும் பார்க்க
சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்
கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - உபேட்சைவளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோன்மிகை - சந்தைச்சமனிலை - சந்தை உற்பத்தி - செலவு |