Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
உபுண்டு லினக்ஸ் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

உபுண்டு லினக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உபுண்டு லினக்ஸ் (Ubuntu linux)
உபுண்டு லினக்ஸ் (Ubuntu linux)

உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ் (debian GNU/Linux) இனை அடிப்படையாகக்கொண்டது இதில் அடங்கியுள்ள அத்தனை மென்பொருட்களும் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிகல் லிட் (Canonical Ltd) எனும் நிறுவனம் உபுண்டுவுக்கு அநுசரணை வழங்குகிறது.

உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. திட்டமிடப்பட்ட அடுத்த வெளியீடான டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப்போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது.


உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், "மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.


பொருளடக்கம்

[தொகு] தன்மைகள்

உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்
உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்
  • நிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.
  • நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.
  • தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.
  • தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.
  • utf -8 குறிமுறைக்கான ஆதரவு.
  • பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
  • synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)
  • புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.


[தொகு] மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்

உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,

  • Main (முதன்மை)
  • Restricted
  • Universe
  • Multiverse

[தொகு] Main

இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.

[தொகு] Restricted

இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணுயினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.

[தொகு] Universe

இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.

[தொகு] Multiverse

இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.

உபுண்டுவில் தமிழ் விக்கிபீடியா.
உபுண்டுவில் தமிழ் விக்கிபீடியா.

[தொகு] உபுண்டு வழங்கலின் வடிவங்கள்

பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.

[தொகு] இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்

  • நிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.
  • நிகழ்வட்டு - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், வன்தட்டில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம்.

[தொகு] வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்

கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.

  • x86 (PC) வடிவம்
  • PPC (ஆப்பிள் கணினிகள்)
  • 64 bit (64பிட் கட்டமைப்புக்குரியது)

[தொகு] வெளியீடுகள்

உபுண்டுவினுடைய பதிப்புக்கள் ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. அவை தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும்.

பதிப்பு வெளியிடப்பட்ட திகதி Code name
4.10 அக்டோபர் 20, 2004 Warty Warthog
5.04 ஏப்ரல் 8, 2005 Hoary Hedgehog
5.10 அக்டோபர் 13, 2005 Breezy Badger
6.06 ஜூன் 1, 2006 Dapper Drake
6.10 அக்டோபர் 26, 2006 Edgy Eft

[தொகு] சகோதர செயற்றிட்டங்கள்

  • குபுண்டு (kubuntu) - இது கே டீ ஈ(KDE) பணிச்சூழலை கொண்டுள்ளது. கே டீ ஈ இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
  • எடியுபுண்டு (edubuntu) - இது கற்றல் தொடர்பான தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட வடிவமாகும்.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புக்கள்

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com