இளையராஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
இளையராஜாவின் இயற்பெயர் டேனியல் ராசய்யா. மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகளின் பெயர் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி ஆகிய ஐவரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் இசைக்கருவியினை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ்.ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் கிராமிய மணம் கமழ இவர் இசையமைத்த படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றது.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கர்னாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான், இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தது.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.
[தொகு] திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்
- இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
- "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை தன் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
- "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
- "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்ணனி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது, இதன் சிறப்பாகும்.
- 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
- "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
- "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
- ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
- "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
- மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
பார்க்கவும்: இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்
[தொகு] சாதனைகள்
- இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்ணனி இசை கோர்த்துள்ளார்.
- ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளன், இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)
- தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
- இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
- 1985இல் - சாகர சங்கமம் (தெலுகு)
- 1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
- 1989இல் - ருத்ர வீணை (தெலுகு)
- இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :
- சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
- வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
- வழித்துணை
- துளி கடல்
- ஞான கங்கா
- பால் நிலாப்பாதை
- உண்மைக்குத் திரை ஏது?
- யாருக்கு யார் எழுதுவது?
- என் நரம்பு வீணை
- நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
- பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
- இளையராஜாவின் சிந்தனைகள்
[தொகு] இளையராசா இசையமைத்த தமிழ் படங்களின் பட்டியல்
- 6 லிருந்து 60 வரை
- 16 வயதினிலே
- 24 மணி நேரம்
- 100வது நாள்
- ஆகாய கங்கை
- ஆளப்பிறந்தவன்
- ஆளுக்கொரு ஆசை
- ஆண்பாவம்
- ஆனந்த்
- ஆனந்த கும்மி
- ஆனந்த ராகம்
- ஆணழகன்
- ஆண்டான் அடிமை
- ஆராதணை
- ஆத்மா
- ஆவாரம்பூ
- ஆயிரம் நிலவே வா
- ஆயிரம் வாசல் இதயம்
- ஆபூர்வ சகோதர்கள்
- ஆபூர்வ சக்தி 369
- அச்சாணி
- அடுத்த வாரிசு
- அடுத்தடுத்து ஆல்பர்ட்
- ஆப்ரிக்காவில் அப்பு
- அகழ் விளக்கு
- அக்னி நட்சத்திரம்
- அக்னி பார்வை
- அலை ஓசை
- அலைகள் ஓய்வதில்லை
- ஆளப்பிரந்தவன்
- அமைதிப்படை
- அம்பிகை நேரில் வந்தாள்
- அம்மன் கோவில் கிழக்காலே
- அம்மன் கோவில் திருவிழா
- அமுத கானம்
- அன்பே ஓடி வா
- அன்பே சங்கீதா
- அன்பின் முகவரி
- அன்புச் சின்னம்
- அன்பு கட்டளை
- அன்புக்கு நான் அடிமை
- அன்புள்ள மலரே
- அன்புள்ள ரஜனிகாந்த்
- அஞ்சலி
- அன்னை பூமி
- அன்னை ஒரு ஆலயம்
- அன்னக்கிளி
- அண்ணன்
- அண்ணனுக்கு ஜெய்
- அன்னையே ஆணை
- அந்த ஒரு நிமிடம்
- அந்த சில நாட்கள்
- அந்தபுரம்
- அரங்கற்றவேளை
- அரண்மனைக் கிளி
- அர்ச்சணை பூக்கள்
- அறுவடை நாள்
- ஆதாரம்
- அதிரடி படை
- அதிர்ஷ்டம் அழைக்கிறது
- அதிசய பிறவி
- அது ஒரு கனாக்காலம்
- ஆட்டோ ராசா
- அவள் அப்படித்தான்
- அவள் ஒரு பச்சைக்குழந்தை
- அவர் எனக்கே சொந்தம்
- அவதாரம்
- அழகே உன்னை ஆராதிக்கிறேன்
- அழகி
- அழகிய கண்னே
- பால நாகம்மா
- பைரவி
- பார்வதி என்னை பாரடி
- பத்திரக்காளி
- பகதிவதிபுரம் ரெயில்வே கேட்
- பரணி
- பரதன்
- பாரதி
- புவனா ஒரு கேள்வி குறி
- பில்லை
- பிரம்மா
- கேப்டன் பிரபாகரன்
- சக்கலத்தி
- சக்கரை பந்தல்
- சந்திரலேகா
- சத்ரியன்
- சின்ன தேவன்
- சின்ன துரை
- சின்ன கவுண்டர்
- சின்ன ஜமின்
- சின்ன கண்ணம்மா
- சின்ன குயில் பாடுது
- சின்ன மாப்பிள்ளை
- சின்ன பசங்க நாங்க
- சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
- சின்ன தாய்
- சின்ன தம்பி
- சின்ன வாத்தியார்
- சின்ன வீடு
- சின்னப்ப தாஸ்
- சின்னவர்
- சிம்பரத்தில் ஒரு அப்புசாமி
- சிட்டுக்குருவி
- டிசம்பர் பூக்கள்
- தீபம்
- தெய்வ வாக்கு
- தேசிய கீதம்
- தேவன்
- தேவர் மகன்
- தேவதை
- தேவி சிறிதேவி
- தாயம் ஒன்று
- தனுஷ்
- தர்மா
- தர்ம பத்தினி
- தர்ம சீலன்
- தர்ம துரை
- தர்ம யுத்தம்
- தர்மம் வெல்லும்
- தர்மத்தின் தலைவன்
- துர்கா தேவி
- எச்சில் இரவுகள்
- ஈர விழ காவியங்கள்
- ஈரமான ரோஜவே
- ஈட்டி
- ஏஜமான்
- எல்லாம் இன்பமயம்
- எல்லாம் உன் கைராசி
- எல்லாமே என் ராசாதான்
- என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு
- என் ஜவன் பாடுது
- என் கிட்ட மோதாதே
- என் மன வானில்
- என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
- என் ராசாவின் மனசிலே
- என் செல்வமே
- என் உயிர் கண்ணம்மா
- என் உயிர் தோழன்
- எனக்காக காத்திரு
- எனக்கு நானே நீதிபதி
- எனக்குள் ஒருவன்
- என்றும் அன்புடன்
- எங்க முதலாளி
- எங்க ஊரு காவல்காரன்
- எங்க ஊரு மாப்பிள்ளை
- எங்க ஊரு பாட்டுக்காரன்
- எங்க தம்பி
- எங்கையோ கேட்ட குரல்
- என்ன பெத்த ராசா
- என்னை பார் என் அழகை பார்
- என்னை விட்டு போகாதே
- எதிர் காற்று
- எத்தனை கோணம் எத்தனை பார்வை
- எழை ஜhதி
- எழுமலையான் மகிமை
- எழுதாத சட்டங்கள்
- பிரண்ட்ஸ்
- காயத்ரி
- கர்ஜனை
- கீதாஞ்சலி
- கிராமத்து அத்தியாயம்
- கிராமத்து மின்னல்
- கோபுர வாசலிலே
- கோபுரங்கள் சாய்வதில்லை
- குணா
- குரு சிஷ்யன்
- ஹலோ யார் பேசுரது
- ஹேய்ராம்
- ஆணஸ்ட்ராஜ்
- ஹவுஸ்புல்
- ஐ லவ் இந்தியா
- இளையராகம்
- இளையவன்
- இளமை இதோ இதோ
- இளமை ஊஞ்சலாடுகிறது
- இளமைக் காலங்கள்
- இளமை கோலம்
- இல்லம்
- இந்திரன் சந்திரன்
- இன்று நீ நாளை நான்
- இன்று போய் நாளை வா
- இங்கையும் ஒரு கங்கை
- இனிய உறவு பூத்தது
- இன்னிசை மழை
- இரண்டில் ஒன்று
- இரட்டை ரோஜh
- இரவு பூக்கள்
- இரும்பு பூக்கள்
- இசை பாடும் தென்றல்
- இதயக் கோவில்
- இதயம்
- இதயத்தை திருடாதே
- இதயத்தில் ஓர் இடம்
- இது எப்படி இருக்கு
- இது நம்ம பூமி
- இவண்
- ஜல்லிக் கட்டு
- ஜனவரி 1
- ஜப்பானில் கல்யாணராமன்
- ஜானி
- ஜோதி
- ஜீலி கணபதி
- காக்கை சிறகினிலே
- காக்கி சட்டை
- காளி
- காசி
- காதல் தேவதை
- காதல் கவிதை
- காதல் பரிசு
- காதல் ரோஜாவே
- காதல் சாதி
- காதலுக்கு மரியாதை
- காத்திருக்க நேரமில்லை
- காறினிலே வரும் கீதம்
- காற்றிற்கு என்ன வேலி
- காவலுக்கு கெட்டிக்காரன்
- கடல் மீன்கள்
- கடலோர கவிதைகள்
- கடமை கண்ணியம் கட்டுப்பாடு
- கடவுள்
- கடவுள் அமைத்ததா மேடை
- கை கொடுக்கும் கை
- கை வீசம்மா கை வீசு
- கைராசிக்காரன்
- கலைஞன்
- கலி காலம்
- கல்லுக்குள் ஈரம்
- கல்யாண கச்சேரி
- கல்யாண ராமன்
- காமராஜ்
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- கண்களின் வார்த்தைகள்
- கண்மணி
- கண்மணி ஒரு கவிதை
- கண்ணா உன்னை தேடுகிறேன்
- கண்ணத்தாள்
- கண்ணன் ஒரு கைக்குழந்தை
- கண்ணத் தொறக்கிறேன் சாமி
- கண்ணே ராதா
- கன்னி ராசி
- கன்னித் தீவு
- கண்ணல் தெரியும் கதைகள்
- கண்ணுக்கொரு வண்ண கிளி (ரிலீஸ் இல்லை)
- கண்ணுக்கு மை அழகு
- கண்ணுக்குள் நிலவு
- கரகாட்டக்காரன்
- கரகாட்டக்காரி
- கரையேல்லாம் செண்பகபு
- கரிமேடு கருவாயன்
- கரிசக்காட்டு புவே
- கற்பூர முல்லை
- கரும்பு வில்
- கருவெல்லாம் பூக்கள்
- கஸ்தூரி மான்
- கட்ட பஞ்சாயத்து
- கட்டளை
- கட்டுமரக்காரன்
- கவலைப்படாதே சகோதரா
- கௌரி மான்
- கவிக்குயில்
- கவிதை மலர்
- கவிதை பாடும் அலைகள்
- கழுகு
- கேளடி கண்மணி
- கேள்வியும் நானே பதிலும் நானே
- கெட்டி மேளம்
- கிளிப் பேச்சுக் கேட்கவா
- கிழக்கே போகும் ரயில்
- கிழக்கு வாசல்
- கிழக்கும் மேற்க்கும்
- கோடை மழை
- கொக்கரக்கோ
- கோலங்கள்
- கொம்பேறி மூக்கன்
- கொஞ்ச பேசலாம்
- கோயில் காளை
- கோயில் புறா
- கோழி கூவுது
- கிருஸ்ணன் வந்தான்
- கும்பக்கரை தங்கையா
- கும்பக்கோணம் கோபாலு
- கும்மிப் பாட்டு
- குங்குமச் சிமிழ்
- குட்டி
- குற்றப் பத்திரிக்கை
- குவா குவா வாத்துக்கள்
- லேடிஸ் டெய்லர்
- லட்சுமி
- எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேசன்
- மாமியார் வீடு
- மாப்பிள்ளை
- மாப்பிள்ளை வந்தாச்சு
- மாரியம்மன் திருவிழா
- மாவீரன்
- மாயாபாஜார்
- மது
- மதுரை வீரன் எங்கசாமி
- மகளிர் மட்டும்
- மகனே மகனே
- மகுடம்
- மகுடி
- மகாநதி
- மகராசன்
- மைக்கேல் மதன காமராஜன்
- மக்களாட்சி
- மலயேறும் மம்பட்டியான்
- மல்லுவேட்டி மைனர்
- மண் வாசணை
- மண மகளே வா
- மனதில் உறுதிவேண்டும்
- மனைவி ரெடி
- மனைவி சொல்லே மந்திரம்
- மனம் வரும்புதே உன்னை
- மனசெல்லாம்
- மனசுக்கேத்த மாப்பிள்ளை
- மணிக்குயில்
- மணிப்புர் மாமியார்
- மனித ஜாதி
- மனிதனின் மறுப்பக்கம்
- மஞ்சள் நிலா
- மன்னன்
- மந்திர புன்னகை
- மரகத வீணை
- மருத நாயகம் (ரீலிஸ் இல்லை)
- மருத பாண்டி
- மீண்டும் கோகிலா
- மீண்டும் ஒரு காதல் கதை
- மீண்டும் பராசக்தி
- மீரா
- மெல்லத் திறந்தது கதவு
- மெல்லப் பேசுங்கள்
- மேட்டி
- மோகமுள்
- மூடு பனி
- மூன்றாம் பிறை
- மௌன ராகம்
- மௌனம் சம்மதம்
- மிஸ்டர் பாரத்
- முதல் மரியாதை
- முதல் வசந்தம்
- முடிவில்லா ஆரம்பம்
- முகம்
- முகத்தில் முகம் பார்க்கலாம்
- முள்ளும் மலரும்
- மும்பை எக்ஸ்பிரஸ்
- முந்தானை முடிச்சு
- முரட்டு கரணங்கள்
- முரட்டுக் காளை
- முதல் இரவு
- முத்து எங்கள் சொத்து
- முதலமைச்சர் ஜெயந்தி
- மை டியர் குட்டிச்சாத்தான்
- மை டியர் மார்த்தாண்டம்
- நாடோடி தென்றல்
- நாடோடி பாட்டுக்காரன்
- நாளை உனது நாள்
- நான் மகான் அல்ல
- நான் பாடும் பாடல்
- நான் போட்ட சவால்
- நான் சந்தித்த சட்டம்
- நான் சிவப்பு மனிதன்
- நான் வாழ வைப்பேன்
- நானே ராஜா நானே மந்திரி
- நாங்கள்
- நானும் ஒர் இந்தியன்
- நானும் ஓர் தொழிலை
- நாட்டுப்புறப் பாட்டு
- நாயகன்
- நடிகன்
- நல்ல நாள்
- நல்ல தம்பி
- நல்லதொர் குடும்பம்
- நல்லது நடந்தே தீரும்
- நல்லவனுக்கு நல்லவன்
- நந்தவனெத் தேரு
- நண்டு
- நதியை தேடி வந்த கடல்
- நட்பு
- நீ சிரித்தால் தீபாவளி
- நீ தானா அந்த குயில்
- நீ தொடும் போது
- நீங்கள் கேட்டவை
- நீதியின் மறுப்பக்கம்
- நெஞ்சத்தை கிள்ளாதே
- நேரம் நல்ல நேரம்
- நெருப்புக்குள் ஈரம்
- நெற்றிக்கண்
- நிலவே முகம் காட்டு
- நிலவு சூடுவதில்லை
- நினைக்க தெரிந்த மனமே
- நினைவெ ஓரு சங்கீதம்
- நினைவெல்லாம் நித்யா
- நினைவுச் சின்னம்
- நிறம் மாறாதா பூக்கள்
- நியாயம்
- நிழல் தேடும் நெஞ்சங்கள்
- நிழல்கள்
- ஓடி விளையாடு தாத்தா
- ஓ மனமே மனமே
- ஒன்னா இருக்க கத்துக்கணும்
- ஊமை விழிகள்
- ஊரெல்லாம் உன் பாட்டு
- ஊரு விட்டு ஊரு வந்து
- ஒப்பந்தம்
- ஒரே முத்தம்
- ஒரே ஒரு கிராமத்திலே
- ஒரு கைதியின் டைரி
- ஒரு நாள் ஒரு கனவு
- ஒரு ஓடை நதியாகிறது
- ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
- ஒருவர் வாழும் ஆலயம்
- பாடாத தேனீக்கள்
- பாடு நிலாவே
- பாடும் பறவைகள்
- பாலூட்டி வளர்த்த கிளி
- பாண்டி நாட்டு தங்கம்
- பாண்டித்துரை
- பாண்டியன்பார்த்தால் பசு
- பாரு பாரு பட்டணத்தை பாரு
- பார்வதி என்னை பாரடி
- பாச மழை
- பாசப் பறவைகள்
- பாட்டு பாடவா
- பாட்டு வாத்தியார்
- பாட்டுக்கு நான் அடிமை
- பாட்டுக்கொரு தலைவன்
- பாயும் புலி
- படிச்ச புள்ள
- படிக்காத பண்ணையார்
- படிக்காதவன்
- பகல் நிலவு
- பகலில் பௌர்ணமி
- பகலில் ஒர் இரவு
- பணக்காரன்
- பங்காளி
- பன்னீர் புஸ்பங்கள்
- பட்டக்கத்தி பைரவன்
- பட்டணம் போகலாம் வா
- பயணங்கள் முடிவதில்லை