மலையாளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மலையாளம் தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படுகின்றது. தவிர வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் ( UAE ), சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரெய்ன், ஓமான் போன்ற நாடுகளிலும், தொழில் நிமித்தம் பெருமளவில் வாழும் மலையாளிகளால் மலையாளம் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.திராவிட மொழிக்குடும்பத்துள் அடங்கும் இது, சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனி மொழியாக வளர்ச்சியடைந்ததாக நம்பப்படுகிறது. பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியான சேர நாடான இன்றைய கேரளத்தில் பேசப்பட்ட தமிழ் மொழி, வடமொழித் தாக்கத்தின் காரணமாக மலையாளமாக உருப்பெற்றது.[மேற்கோள் தேவை]
இந்தியாவின் 15 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று.
பிராமி எழுத்துக்களிலிருந்து உருவான தனியான எழுத்துவடிவம் மலையாளத்துக்கு உண்டு.