தெலுங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். திராவிட மொழிகளுள் அதிக மக்களால் பேசப்படும் மொழி இதுவேயாகும். இந்திய மாநிலங்களுள் தென்னிந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பான்மை மொழியும் இதுவேயாகும். தென்னிந்தியா முழுவதிலும் பேசப்பட்டுவந்த பழம் தமிழ் மொழி, வடமொழிக் கலப்பினால் தெலுங்கு மொழியாக உருவானதாகக் கருதப் படுகிறது. இந்தியாவின் முக்கிய மொழிகளுள் ஒன்றான இது அந்நாட்டின் 15 தேசிய மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
தென்னிந்திய இசை வடிவமான கர்நாடக இசையின் வளர்ச்சியில் தெலுங்கின் பங்கு மிக முக்கியமானது. பெருமளவு கர்நாடக இசைப் பாடல்கள் தெலுங்கு மொழியில் உள்ளன. தமிழ்நாட்டில் கூடக் கர்நாடக இசைக் கச்சேரிகளில் தெலுங்கு மொழியே நீண்டகாலமாக் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதனாற்போலும் இம்மொழி திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இனிமை கூடிய மொழி என்று கருதப்படுகிறது.
இது அயலிலுள்ள இன்னொரு திராவிட மொழியான கன்னட மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்த எழுத்து முறையை கொண்டுள்ளது