பேச்சு:இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
மொழி பெயர்க்கும் போது ஏன் தற்போதைய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கக் கூடாது. அங்குள்ள தற்போதைய கட்டுரை அருமையாக உள்ளது. -- Sundar 05:11, 28 ஏப் 2005 (UTC). For ease of editing, I was tranlating the previous english text already found in this page. hereafter I will try to translate from the original english wikipedia article.--ரவி (பேச்சு) 05:41, 28 ஏப் 2005 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] சிறப்புக் கட்டுரைத் தகுதி
என்னுடைய ஆங்கில விக்கிபீடியா பேச்சுப் பக்கத்தில் ஒருவர் தமிழ் விக்கிபீடியாவில் ஐக்கிய இராச்சியம் போன்ற கட்டுரைகள் சிறப்பு கட்டுரை நிலையை பெற்றுள்ளபோது இந்தியா கட்டுரை ஏன் இன்னும் எட்டவில்லை என்று கேட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, பிரிவினரையோ பற்றி மட்டுமே எழுதவேண்டிய ஆவணமில்லையெனினும் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கும்போது அக்கட்டுரையை நாம் ஏன் சிறப்புக் கட்டுரைத் தகுதிக்கு கொண்டு வரக் கூடாது என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் தற்போதுள்ள India கட்டுரை மிக நன்றாக உள்ளதால் நாம் அதன் பெரும் பகுதியை மொழிபெயர்த்தும் வேறு சில தமிழ் மேற்கோள்களைச் சேர்த்தும் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறேன். -- Sundar \பேச்சு 12:14, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
- சுந்தர், உங்கள் எண்ணம் சரிதான். இந்தக்கட்டுரையை தரமுயர்த்த வேண்டியது அவசியம். முதன்முதலாக இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவிக்கப்பட்ட கட்டுரை இது தான். ஆனால், அப்பொழுது அவ்வளவாக தரமுயர்த்த முடியவில்லை. இன்னொரு முறை இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவித்து செயல்படலாம்--ரவி (பேச்சு) 14:37, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
- இப்பொழுது "இந்தியா" சிறப்புக்கட்டுரைத் தரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அக்கட்டுரையைக் கட்டாயமாக அந்தத் தரத்துக்கு உயர்த்தியாக வேண்டும். இந்தவாரக் கூட்டுமுயற்சியாக இன்னொருமுறை அறிவியுங்கள். Mayooranathan 17:47, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கலாமா? -- Sundar \பேச்சு 05:18, 13 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] தரமுயர்த்துதல்
அரசியல், மற்றும் பண்பாடு பகுதிகளை தமிழாக்க முயன்றிருக்கின்றேன்.
இக் கட்டுரையின் உள்ளடக்கம் பல தகவல்களை கொண்டிருந்தாலும், தரம் போதவில்லை. குறிப்பாக, பண்பாட்டு கூற்றுக்கள் பல வழிகளில் விபரிக்கபட வேண்டியிருக்கின்றது.
பல தகவல்கள் இன்னும் சேற்கப்பட வேண்டும். குறிப்பாக:
- காலநிலை
- கல்வி
- தொழில் துறை (விவசாயம், ஏற்றுமதி, இறக்குமதி)
- சட்டமைப்பு
- பாதுகாப்பு/இராணுவம்
- மக்கள்/சமூகம்/சமூக அமைப்பு
- சமூக பிரச்சினைகள் (சாதி, சமய தீவரவாதிகள், பிரிவினைவாதம்)
- வெளியிறவு கொள்கை
என பல கோணங்களில் இக் கட்டுரை விரிவு படுத்தப்பட வேண்டும்.
இக் கட்டுரை ஒரு பொது அறிமுக கட்டுரையாக செயல்பட வேண்டும். விபரிக்க பட வேண்டியங்கள் தனி கட்டுரையாகவும், அக் கட்டுரைகளுக்கு இக் கட்டுரையில் சுட்டி மூலம் ஒரு சுட்டுதல் வேண்டும்.
மேலும் சுந்தர் ஆரம்பத்தில் சுட்டியது சரி. பழைய ஆங்கில கட்டுரையின் தரம் மத்திமம். தற்போதைய கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்த்த பின்னரே இதை அவதானித்தேன். பரவாயில்லை.
--Natkeeran 03:46, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
- உங்கள் மொழியாக்கம் பார்த்தேன். மிக நன்று. நானும் ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டபடி இது ஒரு பொது அறிமுக நடையிலேயே (எவரேனும் en:Wikipedia:Summary style-ஐ மொழிபெயர்த்து இச்சிவப்பு இணைப்பை நீலமாக்குங்களேன்) இருக்க வேண்டும். ஆங்கில விக்கியின் தற்போதைய கட்டுரையிலிருந்து மேலும் சில தகவல்களைப் பெறலாம். -- Sundar \பேச்சு 09:35, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] Infobox
Hi, could you use the wikisyntax for the infobox table? The history text overlaps with the table. PS. the flag and emblem are incorrect. en:Nichalp 05:31, 2 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] இந்தியா: சில சந்தேகங்கள்
-
- சிந்து சமவெளி நாகரிகம் வேறு ஹரப்பா, மொகஞ்ச்தாரோ நாகரிகங்கங்கள் வேறா? வேற கால கட்டங்களுக்கு உரியனவா? சில வித்தியாசங்கள் சுட்ட முடியுமா?
-
- ஹந்தியை இந்தி என்றுதானே பொதுவாக எழுதுவார்கள். (இயன்றவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா?) விக்கிபீடியாவில் எது சரியான வழக்கு?
- ஆம். இந்தி என்று தான் குறிப்பிட வேண்டும். (விக்கிபீடியா:நடைக் கையேடு) -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)
- ஹந்தியை இந்தி என்றுதானே பொதுவாக எழுதுவார்கள். (இயன்றவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா?) விக்கிபீடியாவில் எது சரியான வழக்கு?
-
- வரலாறு பகுதியின் ஆரம்பம் சற்று பிசகி இருப்பது போல் எனக்கு தோன்றுகின்றது.
- கி.மு 300 என்றால் 2305 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபம் -> சரி
- 40, 000 வருடங்களுக்கு முந்திய பாறை ஓவிய மருப் -> சரி
- தொடர்பு என்ன? வரலாற்று தொன்மையின் சாட்சிகள்?
-
- எனது கருத்தில் தென்னாசியாவின் ... என்ற வசனத்துடன் ஆரம்பிகலாம் போல தோன்றுகின்றது. ஏன் என்றால், நவீன மனிதனே 6000 வருடங்களுக்கள் வரலாறு கொண்டதாகத்தான் எங்கேயோ படித்ததாக நியாபகம்.
-
- அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்கள் நன்று.
-
- ஜி.டி.பி தலை $ 2540 ? புள்ளி விபர ஆதாரங்கள் தர முடியுமா. பொதுவாக புள்ளி விபரங்களுக்கு ஆதாரங்கள் தருவது நன்று.
- ஆங்கில விக்கிபீடியாவின் en:Economy of India-கட்டுரை சிறப்புக் கட்டுரையாகும். அங்கிருந்து இந்த மேற்கோள் கிடைத்தது. இதன் படி தனி நபர் வருவாய் $3100 ஆகும். -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)
- ஜி.டி.பி தலை $ 2540 ? புள்ளி விபர ஆதாரங்கள் தர முடியுமா. பொதுவாக புள்ளி விபரங்களுக்கு ஆதாரங்கள் தருவது நன்று.
-
- நான் பொருளாதார பகுதியில் ஒரு பந்தியை இணைத்துள்ளேன். அதில் தரப்பட்டிருக்கும் தரவுக்கான மேலும் நம்பிக்கைக்கு உரிய அல்லது அதிகாரபூர்வமான ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றேன்.
-
- பண்பாடு பற்றிய விரிவு ஒரு அறிமுக கட்டுரைக்கு அவசியமற்றது என நான் கருதியால், முதல் இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் பண்பாடு கட்ரையுடன் இணைத்துவிட்டேன். ஆட்சோபனை இருந்தால் தெரிவுயுங்கள்.
- விக்கிபீடியா:பொது அறிமுக நடை கொள்கையின்படி நீங்கள் செய்தது முற்றிலும் சரியே. -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)
- பண்பாடு பற்றிய விரிவு ஒரு அறிமுக கட்டுரைக்கு அவசியமற்றது என நான் கருதியால், முதல் இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் பண்பாடு கட்ரையுடன் இணைத்துவிட்டேன். ஆட்சோபனை இருந்தால் தெரிவுயுங்கள்.
-
- மேலும், ரவி அவர்கள் இரு பந்திகளுக்கு இடையே ஆங்கில விக்கி போல் ஒரு இடைவெளியும் விட தேவையிலை என்று பரிந்துரைத்தார். எனினும், தமிழில் ஆங்கிலம் போல் Capital Letters இல்லாததால் பந்திகளுக்கு இடையே ஒரு வரி வெற்றிடம் (தொகுத்தலின் போது இரு வரிகள்) விடுவது அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து. வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கின்றது. இக் கட்டுரையின் பண்பாட்டு sub section னை பிற sub sections உடன் ஒப்பிட்டு நோக்குக. சில வேளைகளில் நாம் பார்க்க உபயோகிக்கும் browsers இலும் இது தங்கி இருக்கலாம்.
- இது ஒரு கவனிக்கத்தக்க கருத்து. தமிழ் எழுத்துருக்களில் இன்னமும் இடைவெளிகள் சீராக இல்லாமல் இருப்பதும் ஒரு குறையே. இது போன்ற சில சிறப்புக் காரணங்களுக்காக சில நடை உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. அனைவருக்கும் ஏற்புண்டென்றால் நடைக் கையேட்டிலேயே பரிந்துரைக்கலாம். -- Sundar \பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)
- மேலும், ரவி அவர்கள் இரு பந்திகளுக்கு இடையே ஆங்கில விக்கி போல் ஒரு இடைவெளியும் விட தேவையிலை என்று பரிந்துரைத்தார். எனினும், தமிழில் ஆங்கிலம் போல் Capital Letters இல்லாததால் பந்திகளுக்கு இடையே ஒரு வரி வெற்றிடம் (தொகுத்தலின் போது இரு வரிகள்) விடுவது அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து. வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கின்றது. இக் கட்டுரையின் பண்பாட்டு sub section னை பிற sub sections உடன் ஒப்பிட்டு நோக்குக. சில வேளைகளில் நாம் பார்க்க உபயோகிக்கும் browsers இலும் இது தங்கி இருக்கலாம்.
--Natkeeran 16:06, 2 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] இந்திய வரலாறு முதல் வசனத்தை யாராவது சற்று விளக்குவீர்களா?
--Natkeeran 19:54, 14 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] அண்மைய மாற்றங்களும் ஐயங்களும் ஆலோசனைகளும்
புள்ளி விவரங்கள் பகுதியில் உள்ள தகவல்கள் ஏற்கனவே கட்டுரையில் இடம் பெற்றிருந்ததால் அதை நீக்கி விட்டேன். அரசியல் அமைப்பு பகுதியில் ஆள் வரை என்ற சொல் வருகிறது. அப்படி என்றால் என்ன என்று தயை செய்து விளக்குங்கள். இந்திய மகளிர் பற்றிய பகுதி பெரிதும் எதிர் மறையாக எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. நற்கூறுகளையும் எழுதலாம். மகளிருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மூன்று அரசியல் பின்புலம் உள்ள மகளிர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது சரி இல்லை. வேண்டுமானால் இப்பெண்மணிகள் அரசியலில் சாதனை புரிந்துள்ளார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.
இந்திய பொருளாதாரப் பகுதியில் இந்திய தொழிற் துறை பற்றி சரியாக விளக்கப்பட வில்லை எனக் கருதுகிறேன். இம்மாற்றங்களையும் செயற்படுத்தி மேலும் இக்கட்டுரையை செம்மை செய்து பின்னர் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம். சுரேன் சொன்னது போல் அங்கங்கு கட்டுரை தொனி முரண்படுவது உண்மை தான். இயன்ற அளவு மாற்ற முயலலாம். எனினும் அது பெரிய குறையாகத்தோன்றவில்லை--ரவி (பேச்சு) 14:27, 23 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] 65.113.143.60 இன் தொகுப்பு
[1] இவர் சில பகுதிகளை பேச்சு பக்கத்தில் கூறாமல் நீக்கியுள்ளார். 14:27, 21 ஜூலை 2006 Ganeshk இன் தொகுப்புக்கு முன்னிலை படுத்தினேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:17, 19 ஆகஸ்ட் 2006 (UTC)