Wikipedia:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்போது தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை மிகுதியில்லாததால், சிறப்புக் கட்டுரைகள் நியமனத்திற்கான நெறிமுறைகள் சிலவேயாகவும் எளிமையானதாகவும் இருக்கும். நாளடைவில், கட்டுரைகளின் எண்ணிக்கையும் தரமும் வளரும் போது, விக்கிபீடியர்கள் கலந்துரையாடி ஒரு இணக்க முடிவு எடுத்து இந்நெறிமுறைகளை மாற்றலாம்.
ஒரு சிறப்புக் கட்டுரை,
- முழுமையாக தமிழில் இருத்தல் அவசியம். அடைப்புக் குறிக்குள் ஆங்கிலமோ பிறமொழிச் சொற்களோ தரலாம்.
- நடுநிலையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- தவறான தகவல்கள் ஏதும் இருக்கக் கூடாது. இயன்ற அளவு, பிற மதிக்கத்தக்க ஆவணங்களை மேற்கோள் காட்டுங்கள். (எ-கா) பிபிசி தமிழ் வலைத்தளம்
- எடுத்துக்கொண்ட கருப்பொருளைப் பற்றி நன்கு விளக்கமாக எழுதப்பட வேண்டும். அதே நேரம் பொது அறிமுக நடையைப் பின்பற்ற வேண்டும்.
- நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள நடைப் பிறழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
தற்போதைய சிறப்புக் கட்டுரைகள் நல்ல எடுத்துக்காட்டு கட்டுரைகள். அவற்றின் பட்டியலை இங்கே காணலாம்.