அற்றிலா த ஹன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அற்றிலா த ஹன் (Attila the Hun, 406-453) எனப்படும் அற்றிலா ஹன் அரசர்களுள் கடைசியானவனும் மிகவும் பலம் வாய்ந்தவனும் ஆவான். 434 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அக்காலத்து ஐரோப்பாவின் மிகப் பெரிய பேரரசை ஆண்டவன் இவனாவான். அவனது பேரரசு மத்திய ஐரோப்பாவிலிருந்து கருங்கடல் வரையிலும் டன்யூப் நதியிலிருந்து பால்டிக் வரையிலும் பரந்திருந்தது. அற்றிலாவின் இறப்புடன் அவன் கட்டியெழுப்பிய பேரரசும் அழிந்தது. ஆயினும் ஐரோப்பிய வரலாற்றில் முக்கியம் வாய்ந்த ஓர் அரசனாவான்.