இரண்டாம் உலகப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இப்போரின் காரணமாக மொத்தம் ஐந்திலிருந்து ஆறு கோடி மக்கள் இறந்தனர். இது அப்போதைய உலக மக்கள் தொகையில் மூன்று சதவீதம் ஆகும்.