பல்லினப்பண்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பல்லினப்பண்பாடு (Multiculturalism) பல பண்பாட்டு கூறுகளின் பேணலில், பகிர்தலில் உருவாகும் ஒரு பண்பாட்டு சூழலை குறிக்கும்.
பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
பல்லினப்பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக காரணம் உலகமயமாதல் ஆகும். பல்லினப்பண்பாடு உலக பண்பாட்டின் ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடு. பல்லினப்பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடுகளாக ரொறன்ரோ, மும்பாய், நியு யோர்க் போன்ற நகரங்கள் விளங்குகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் அரச கொள்கையாவும் பல்லினப்பண்பாடு இருக்கின்றது.