நிதிக் கணக்காய்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிதிக் கணக்காய்வு (Financial audit) என்பது தொழில்சார் திறனும், தகமையும் கொண்ட ஒரு சுதந்திரமான நபரினால் அல்லது நிறுவனத்தால் தொழில் நிறுவங்களில் அல்லது சட்டவரையறை உள்ள அமைப்புக்களின் நிதி அறிக்கைகளின் மீது நடாத்தப்படும் கணக்காய்வு ஆகும்.மேலும் விதப்பாக கூறினால் நிதிக்கூற்றுகள் மீதான கணக்காய்வு எனலாம். கணக்காய்வின் முடிவில் நிதிக்கூற்றுக்கள் உண்மையானதும், நியாயமானதும் என்றோ அல்லது இல்லை என்றோ கணக்காய்வு அபிப்பிராயம் (Audit opinion) வெளிப்படுத்தப்படும்.
கணக்காய்வினை மேற்கொள்ளும் நபர் கணக்காய்வாளர் (Auditor) எனப்படுவர்.இவர் கணக்கியல் தொடர்பான தொழிற் தேர்ச்சியும், நியமங்கள் பற்றிய பூரண அறிவும், சட்டவிதிப்புக்கள் பற்றியும் அறிவினையும் கொண்டிருப்பார்.(இலங்கையில் பட்டயக் கணக்கறிஞர் மட்டுமே கணக்காய்வினை மேற்கொள்ள முடியும்).
ஒரு நிறுவனம் தொடர்பில் 2 வகையான கணக்காய்வாளர்கள் காணப்படலாம்:
- அகக் கணக்காய்வாளர் - (internal auditors) நிறுவனத்தின் அகக் கட்டுபாடு முறையின் வினைத்திறன் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்கும்,அவைபற்றிய தனது முடிவினை முகாமைக்கு அறிக்கையாக சமர்பிப்பதற்காகவும் நிறுவன முகாமையால் நியமிக்கப்படுபவர்.
- புறக் கணக்காய்வாளர் - இவரே நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வினை மேற்கொள்ளும் சுதந்திர நபர் ஆவா.தேவைப்படின் இவர் அகக் கணக்காய்வாளரின் உதவினை பெற்றுக்கொள்வார்.
பொருளடக்கம் |
[தொகு] கணக்காய்வின் நோக்கம்
[தொகு] கணக்காய்வு படிமுறைகள்
[தொகு] கணக்காய்வின் வகைகள்
- புறநிலைக் கணக்காய்வு
- அகக் கணக்காய்வு
- இறுதிநிலைக் கணக்காய்வு
- இடைக்காலக் கணக்காய்வு
- தொடர் கணக்காய்வு
- ஆழத்தில் கணக்காய்வு
- செயற்பாட்டுக் கணக்காய்வு
[தொகு] பிரசித்தமான கணக்காய்வு நிறுவனங்கள்
கீழ் உள்ள அட்டவணையில் உள்ள 4 நிறுவனங்களும் (Big 4) உலகளாவிய ரீதியில் இயங்குவதும்,கணக்காய்வின் மூலம் அதிகளவான வருமானம் பெறும் நிறுவனங்களுமாகும்.
கணக்காய்வு நிறுவனம் | 2005 ம் ஆண்டில் உலகளாவிய வருமானம் (US டொலரில்) |
---|---|
PricewaterhouseCoopers (corporate website) | 20.3பில்லியன் |
Deloitte (corporate website) | 18.2பில்லியன் |
Ernst & Young (corporate website) | 16.9பில்லியன் |
KPMG (corporate website) | 15.7பில்லியன் |
இவைதவிர ஏனைய கணக்காய்வு நிறுவனம்: