தொழில் நிறுவனங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலாபத்தினை உழைப்பதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடாத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்புக்கள் தொழில் நிறுவனங்கள்(Business Organization) எனப்படும். இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற (non-profit) நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும்.தொழில் நிறுவனத்தின் அமைப்பாக்கத்திற்கு பௌதீகவளம்,மனிதவளம்,நிதிவளம் மற்றும் தகவல்வளம் என்பன அவசியமாகும்.இவ் வளங்களினைக் கொண்டு தொழில் நிறுவனங்களானது உற்பத்தி,கொள்வனவு,விற்பனை,சேவைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
[தொகு] நிறுவனங்களின் வகைகள்
நபர்களின் எண்ணிக்கை,கடன் பொறுப்புக்கள் தொடர்பில் பின்வருமாறு தொழில் நிறுவனங்களின் வகைகள் காணாப்படும்.
- தனியாள் தனியொருவரால் நடாத்தப்படுவது காரணத்தால் உண்மையில் நிறுவன வகைக்குள் அடங்காது.
- பங்குடைமை
- வரையறுக்கப்பட்ட கம்பனி (LLC,Ltd.).
- கூட்டுத்தாபனம் (Inc.,Co.,Corp.).
- கூட்டுறவு சங்கம்