பயனர் பேச்சு:ஜெ.மயூரேசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 |
[தொகு] பேச்சுப் பக்கங்களைத் தொகுத்தல்
ஆம். /தொகுப்பு 02 என்ற குறியீட்டை உட்புகுத்தினால் துணைப்பக்கத்திற்கான சிவப்பு இணைப்பு உருவாகும். அதன்வழி சென்று தொகுப்பை உருவாக்கலாம். மேலும் பார்க்க: en:Wikipedia:How to archive a talk page. இயன்றால் இந்தப் பக்கத்தை மொழிபெயர்த்து விக்கிபீடியா:பேச்சுப் பக்கங்களைத் தொகுத்தல் எப்படி? என்ற பக்கத்தில் இடுங்கள். -- Sundar \பேச்சு 10:08, 15 பெப்ரவரி 2006 (UTC)
- தகவலுக்கு நன்றி சுந்தர்--ஜெ.மயூரேசன் 10:29, 15 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] இலங்கை தேர்தல்
மயுரேசன், இலங்கை தேர்தல்களை பற்றி நீங்கள் தொகுத்திருப்பது நன்று. கலாநிதியும் சற்று விரிவு படுத்தியிருக்கின்றார். இப்பக்கத்தை தற்போதைய நிகழ்வுகள் பக்கத்திலும் சேர்க்கலாம். --Natkeeran 18:04, 17 பெப்ரவரி 2006 (UTC)
நன்றி நக்கீரன். அப்படியே செய்யலாம்.--ஜெ.மயூரேசன் 04:18, 19 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] Lord of the Rings
முதல் பாகத்தை மட்டும்தான் பார்த்தேன். நல்ல படம். இப்படிப்பட்ட படங்களில் நாம் துலைந்தே போகலாம். இத்தலைப்புக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு பெயரையும் பரிந்துரையுங்களேன். அத்தோடு, தலைப்பில் (திரைப்படம்) என்று சேர்தீர்கள் என்றாலும் நன்று. --Natkeeran 14:18, 23 பெப்ரவரி 2006 (UTC)
- இக்கட்டுரையின் தலைப்பை மொழிபெயர்க்காமல் எழுத்துப்பெயர்ப்பு மட்டும் செய்தால் போதுமானது என்று கருதுகிறேன். பெயர்சொற்களை மொழிபெயர்க்க வேண்டாம். கட்டுரையின் முதல் பத்தியில் மொழிபெயர்ப்பை அடைப்புக்குறிகளுக்குள் தரலாம். நற்கீரனும் அதைத் தான் குறிப்பிடுகிறாரோ? -- Sundar \பேச்சு 03:52, 24 பெப்ரவரி 2006 (UTC)
-
- Yes, there is no need to translate the titles of English movies, but if some work is very famous, you could suggest a Tamil name that other can use to make reference to it. Moreover, even for the English title, you might still want to add (திரைப்படம்). --Natkeeran 12:39, 24 பெப்ரவரி 2006 (UTC)
- 3 பாகங்களையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன் அத்தனை விறு விறுப்பு, மற்றது இங்கு நான் நாவலைப்பற்றியே கட்டுரையை எழுதியுள்ளேன். ஆகவே திரைப்படம் என எழுதுவது தேவையா? அல்லது திரைப்படம் பற்றி தனியான கட்டுரை எழுத வேண்டுமா?--ஜெ.மயூரேசன் 03:16, 26 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] நன்றி நண்பரெ
எனது பங்களிப்பை இன்றிலிருந்து தொடங்கி உள்ளென். தட்டச்சு செய்ய சிறிது சிரமம்மாக உள்ளது. இருபீனும் தமிழில் தட்டச்சு செயும் ஆர்வம் அதிகரிதுள்ளது (இதை எழுதுவதற்கு அரை மணி நெரம் ஆனது).
--M.arunprasad 07:01, 1 மார்ச் 2006 (UTC)
- ஆரம்பத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் போகப் போகப் பழகிவிடும்.--ஜெ.மயூரேசன் 09:59, 1 மார்ச் 2006 (UTC)
[தொகு] வாழ்க்கை வரலாறு எழுதல்
வாழ்க்கை வரலாறு எழுதும் பொழுது ஒருவித உள்ளடக்க சீர்மையை கொண்டிருப்பது நன்று என்று நினைக்கின்றேன். பிறப்பு, இறப்பு, இடம், போன்ற விடயங்களை சுருக்கமாக சொல்வது சிறப்பு என்றும் நினைக்கின்றேன். இவ்விடயங்களை முன்நிறுத்தி ஒரு கையேடு வரைபில் (Wikipedia பேச்சு:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு) இருக்கின்றது. உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 02:32, 29 மார்ச் 2006 (UTC)
- வாசித்துப் பார்த்தேன். இனிமேல் அவ்வாறு பின்பற்றி எழுதுகின்றேன்.--ஜெ.மயூரேசன் 06:50, 29 மார்ச் 2006 (UTC)
[தொகு] விடுமுறை
பல்கலைக் கழக முதலாம் ஆண்டு விடுமுறை இன்றுடன் அமுலுக்கு வருகின்றது. அதனால் இன்று மாலை நான் திருகோணமலைக்குச் செல்ல இருக்கின்றேன் (அதாவது வீடு செல்கின்றேன்). இதன் காரணமாக ஒரு மாதம் அளவிற்கு பங்களிப்பு குறைவாக இருக்கும். பணம் செலுத்தி இணையத்தில் உலாவுவது என்பது சாத்தியம் இல்லை. ஆயினும் அடிக்கடி வந்து சிறு சிறு மாற்றங்களை செய்து செல்ல்வேன் என்று உறுதி கூறுகின்றேன். --ஜெ.மயூரேசன் 07:22, 29 மார்ச் 2006 (UTC)
-
- உங்கள் பங்களிப்புக்களுக்கு மிக்க நன்றிகள். பல ஆங்கில நாவல்கள், இலக்கியம் படிப்பீர்கள் போல தெரிகின்றது. பல நல்ல புதிய தகவல்களோடும், கட்டுரைகளோடும், அனுபவங்களோடும் மீண்டும் வர வாழ்த்துக்கள். --Natkeeran 07:35, 29 மார்ச் 2006 (UTC)
நன்றி நக்கீரன். நீங்கள் நினைப்பது போல ஆங்கிலத்தில் அவ்வளவு பாண்டித்தியம் இல்லை. ஓரளவு பரீச்சயம் உண்டு அவ்வளவுதான். ஆங்கில சிறுவர் இலக்கியங்கள் பல படித்துள்ளேன். அத்துடன் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில நாவல்கள் வாசிப்பதுண்டு ஆயினும் தற்போது இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை.--ஜெ.மயூரேசன் 05:27, 30 மார்ச் 2006 (UTC)
ஆமாம் சுந்தர் அவர்களே! நேற்று கம்பஸ் தொடங்கியது. 3 மாத விடுமுறை............--ஜெ.மயூரேசன் 08:07, 22 ஜூன் 2006 (UTC)
[தொகு] நுழைவாயில்கள்
மயுரேசன், நுழைவாயில்கள் அமைப்பது பற்றி எனக்கு தெளிவான விளக்கம் இல்லை. தமிழ் விக்கிபீடியாவில் பயனர்:வைகுண்ட ராஜா தான் முறையான நுழைவாயில் (நுழைவாயில்:அய்யாவழி) (ஆங்கில விக்கிபீடியாவை பின்பற்றி) அமைத்துள்ளார் என்று நினைக்கின்றேன். அவரின் முன்மாதிரியை வைத்து பிற நுழைவாயில்களை அமைப்பது அவ்வளவு சிக்கலாக இருக்காது என்று நினைக்கின்றேன். --Natkeeran 16:28, 31 மார்ச் 2006 (UTC)
-
- நன்றி நக்கீரன். நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நுழைவாயில் அமைத்துள்ளேன். அதைப்பற்றி இங்கும் ஒரு நுழைவாயில் அமைக்கலாம் என்று நினைக்கின்றேன். Portal for Sri Lanka--ஜெ.மயூரேசன் 12:44, 1 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] பார்க்க
பார்க்க பகுப்பு பேச்சு:த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்--ரவி 12:02, 23 ஜூன் 2006 (UTC)
[தொகு] வலைவாசல் அமைத்தல்
- எப்படி வலைவாசல் அமைப்பது?
உங்கள் நுட்பங்களை பகிர்ந்தால் நன்று. --Natkeeran 05:37, 28 ஜூன் 2006 (UTC)
வலைவாசல் அமைப்பதற்கு ஆங்கில விக்கிப்பீடியா கையேட்டைப் பயன்படுத்தினேன். ஆனால் அங்கு இருந்த மாதிரி இங்கு வலைவாசல் அமைப்பது இலகுவாக இருக்கவில்லை. எனக்கு தெரிந்தவற்றை நாளை பல்கலைக்கழக கணணியில் இருந்து பகிருகின்றேன். இன்று நேரப் பற்றாக்குறையாக உள்ளது மன்னிக்கவும்.--ஜெ.மயூரேசன் 13:47, 2 ஜூலை 2006 (UTC)
[தொகு] நன்றி
உங்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. --டெரன்ஸ் 07:21, 20 ஜூலை 2006 (UTC)
[தொகு] உதவி
இரவி இதனைச் சரி செய்து விட்டார். கொஞ்சம் வேலையாக இருந்ததால் உடனே பார்க்க முடியவில்லை. --சிவகுமார் 09:41, 21 ஜூலை 2006 (UTC)
- யார் செய்தா என்ன சரி செய்து விட்டால் சரி......--ஜெ.மயூரேசன் 11:04, 24 ஜூலை 2006 (UTC)
[தொகு] வாக்குச் சேகரிப்பு :)
மயூரேசன்,
- தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
- ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:02, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:26, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] தங்க மனிதன்
மயூரேசன், நான் தான் உங்களை இங்கு தங்க வைத்த தங்க மனிதன் என அறிந்து மகிழ்ந்தேன் ;)--ரவி 13:28, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- நான் சலிப்படைந்து இங்கிருந்து ஓய ஆரம்பித்த வேளையில் உற்சாகம் ஊட்டியவர் நீங்கள்தான்!!!! ;-)--ஜெ.மயூரேசன் 06:08, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
ஓ, கேட்க சந்தோஷமா இருக்கு..நன்றி--ரவி 07:09, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
mayooresan, if u have a skype/msn/yahoo/gmail chat id, please let me know. I am interested to catch u in chat sometime to discuss our projects :) :) ! Or u can let me know ur phone number if u wish. please send the details to ravidreams_03 at yahoo dot com--ரவி 10:45, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
மயூரேசன், இப்பொழுது நீங்கள் free என்றால் என்னால் அழைக்க இயலும். இல்லாவிட்டால், எந்த நாள் எந்த நேரம் என்று தெரியப்படுத்துங்கள். நேற்று தான் கோபியிடம் பேசினேன்.--ரவி 10:26, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] பகுப்பு பக்கங்கள்
மயூரேசன், பகுப்பு பக்கங்களை உருவாக்க நிர்வாகி அணுக்கம் தேவையில்லை. நீங்களே செய்யலாம். பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது, பக்கங்களை அழிப்பது, அழிகப்பட்ட பக்கங்களை மீட்பது, மீடியாவிக்கி பக்கங்களை தொகுப்பது ஆகியவற்றுக்கு மட்டுமே நிர்வாகி அணுக்கம் தேவை. பிற தொகுப்பு பணிகள் அனைத்தையும் நிர்வாகி அணுக்கம் அற்றோரும் செய்யலாம். பகுப்பு பக்கத்தில் அதன் தாய்ப் பகுப்புக்கான இணைப்பைச் சேர்க்கும் ஒரு சிறு தொகுப்பை செய்வதின் மூலம், பகுப்பு பக்கத்தை உருவாக்கி விட முடியும்.--ரவி 06:30, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- ஆரம்பத்தில் இருந்தே இதுதான் வழக்கமா? முன்பு என்னால் புதிய பகுப்புகள் உருவாக்க முடியாமல் இருந்ததாக ஞாபகம்?? --ஜெ.மயூரேசன் 06:49, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
தொடக்கத்தில் இருந்தே இப்படித்தான். கட்டுரைப் பக்கத்தில் ஒரு புதிய பகுப்பின் பெயரை இட்டவுடன் சிகப்பு இணைப்பு தான் வரும். அந்த இணைப்பை பின்பற்றி சென்று தொகுப்பு பக்கத்தில் ஏதாவது ;) எழுதி ஒரு தொகுப்பை சேமித்தால் பகுப்புப் பக்கம் உருவாக்கப்பட்டுவிடும்--ரவி 07:13, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- எங்கேயோ தவறான அபிப்பிராயம் கொண்டு இருந்திருக்கின்றேன். ஆயினும் தகவலுக்கு நன்றி --ஜெ.மயூரேசன் 07:15, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
மயூரேசன், இரண்டு பந்தி அளவுக்கு மேலுள்ள கட்டுரைகளுக்கு stub வார்ப்புரு இட வேண்டாம். அவற்றை நாம் குறுங்கட்டுரைகளாக கருதுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் stub வார்ப்புருவை எடுத்திருக்கிறேன். அது ஓரளவுக்கு வளர்ந்த கட்டுரை தான். பிறகு, புதிதாக வார்ப்புருக்களை உருவாக்கம்போது அனைத்தையும் சிற்றெழுத்துக்களில் எழுதுங்கள். எடுத்துக்காட்டுக்கு Sports-stub என்பதற்கு பதில் sports stub என்றிருக்க வேண்டும். தற்பொழுது உள்ள sports-stubல் பிற குறுங்கட்டுரை வார்ப்புருக்களில் இருப்பது போல் ஒரு சட்டம் (border) மற்றும் பின்னணி வண்ணமும் இருப்பது நன்று. இது கட்டுரை உரையில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்ட இயலும். மாற்றாக, வார்ப்புரு:stubrelatedto என்பதையும் அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தலாம். அவ்வார்ப்புருவை இணைத்த பக்கங்களை நீங்கள் பார்வையிட்டால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது புரிய வரும்--ரவி 07:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- நான் ஆங்கில விக்கிப்பீடியாவைப் பின்பற்றியே இதைச் செய்தேன். அங்குள்ள வார்ப்புருவையே பின்பற்றினேன். விளையாட்டு தொடர்பாக பெருமளவு கட்டுரைகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ள வேளையில் வார்ப்புரு:stubrelatedto என்பதைப் பயன்படுத்துவதைவிட இதையே பயன்படுத்தலாமே.
மற்றது குறுக்கட்டுரை பற்றிய விளக்கத்தற்கு நன்றி. இரண்டு பந்திகளுக்கு மேலிருப்பவற்றிற்கு நான் இனி வார்ப்புருவை இடவில்லை.. நன்றி தகவலுக்கு --ஜெ.மயூரேசன் 07:29, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
நானும் stubrealtedto பயன்படுத்துவதை தனிப்பட்ட முறையில் விரும்புவதில்லை. உங்கள் தகவலுக்காக மட்டுமே சொன்னேன்.--ரவி 08:12, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] நன்றி
தங்கள் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்புருனோ மஸ்கரனாஸ் 13:05, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] பாராட்டுக்கள்
மயூரேசன், மீண்டும் நீங்கள் முழுவீச்சில் பங்களிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். --சிவகுமார் 09:30, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
- நன்றி சிவகுமார் அவர்களே! இன்று பல்கலைக்கழகத்தில் கல்விசார் ஊழியர்கள் பணிநிறுத்தம் அதனால் மாலை 4 மணிவரை இணையத்தில் இருக்கலாம் எந்தத் தொல்லையும் இல்லை ;)--ஜெ.மயூரேசன் 09:32, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] விரைவில் குணமடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்
எனது யாகூ 360 சிக்குன்குனியாவலைப்பதிவில் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியொன்றை விட்டுச் சென்றுள்ளீர்கள். நீங்கள் விரைவில் சுகமடைய இறைவனை வேண்டுகின்றேன். --Umapathy 17:04, 24 நவம்பர் 2006 (UTC)
என்னடா இது தமிழருக்கும் விக்கிபீடியர்களுக்கும் வந்த சோதனை ! சிக்குன்குனியா பாதித்த விக்கிபீடியர் என்று ஒரு பகுப்பு உருவாக்கும் நிலை வராமல் இருந்தால் சரி. விரைவில் குணமடைவீர்கள் மயூரேசன். என் அக்கா, அம்மா, சித்தி ஆகியோரையும் இந்நோய் தாக்கியது :( பிற இலங்கை, தமிழக விக்கிபீடியர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.--Ravidreams 18:24, 24 நவம்பர் 2006 (UTC)
- உமாபதி மற்றும் ரவி இருவருக்கும் நன்றிகள்!!
நான் பூரண சுகம் அடைந்துவிட்டேன்!! கடந்தவாரம் பல்கலைக்கழகம் மீள ஆரம்பித்து விட்டது... அதனால் இனி இங்கே அடிக்கடி தலைகாட்டலாம்!!! வீட்டில் இணைய வசதி எடுப்பதாக உத்தேசம் உள்ளது அப்படி எதிர்காலத்தில் எடுத்தால் என் பங்களிப்பு மிகவும் கூடலாம். நன்றி--ஜெ.மயூரேசன் 07:02, 5 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] ஆண்டு அறிக்கை
மயூரேசன், படிப்பு சற்று ஓய்தவுடன், நேரம் கிடைக்கும் பொழுது, உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. நன்றி. --Natkeeran 01:34, 8 டிசம்பர் 2006 (UTC)
- Thanks for inviting me! I just published my view and expections on comming year 2007--ஜெ.மயூரேசன் 07:42, 15 டிசம்பர் 2006 (UTC)
தமிழில் தட்டச்சு இணைப்பைப் பற்றிய உங்களின் இணைப்பைத் தாருங்கள், ரவியும் தமிழ் 99 விசைப்பலகை பற்றி ஓர் வலைப் பதிவு எழுதியுள்ளார். இவற்றை விக்கிபீடியாவில் இருந்து இணைத்து விடுவோம். இதை நீங்களே இணைத்து விடலாம். கலாநிதியின் கவலை என்னவென்றால் இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு இத்தளத்தை இலங்கைப் பிரேதச வாதங்களை முன்னெடுக்குமோ என்ற பயமாக இருக்குமென்றே நினைக்கின்றேன்.--Umapathy 09:29, 15 டிசம்பர் 2006 (UTC)