Privacy Policy Cookie Policy Terms and Conditions சிக்குன்குனியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிக்குன்குனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

?
சிக்குன்குன்யா தீ நுண்மம்
அறிவியல் வகைப்பாடு
குடும்பம்: Togaviridae
இனம்: Alphavirus
சிற்றினம்: சிக்குன்குன்யா தீ நுண்மம்
ஒரு  மனிதனைக் கடிக்கும் ஈடிஸ்  ஈஜிப்டை கொசு
ஒரு மனிதனைக் கடிக்கும் ஈடிஸ் ஈஜிப்டை கொசு

சிக்குன்குனியா என்பது ஒரு தீ நுண்மத்தால் (வைரஸால்) பரவும் நோய் ஆகும். இந்த நோய்க்கு காரணமான தீ நுண்மமானது ஆல்பா வகை தீ நுண்மம் ஆகும். இந்த தீ நுண்மம் ஈடிஸ் ஈஜிப்டை (Aedes egypti) வகை கொசுக்கள் (இலங்கைத் தமிழ்: நுளம்பு) மூலம் பரவுகின்றன. இது பற்றிய பீதிகளும் பரவியவண்ணம் உள்ளன.[1]

இது ஒரு உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆனால் 2005-2006 ஆண்டுகளில் ஏறத்தாழ 200 பேர் வரை ரீயூனியன் தீவில் சிக்குன்குனியா தொடர்பான சூழலில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.

2006ஆம் ஆண்டில் பல இந்திய மாநிலங்களில் இந்நோய் தொற்றியது. செப்டம்பர் 2006 நிலவரப்படி ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 12, 2006 வரை கேரளத்தில் மட்டும் 125 பேர் இந்நோய் தொடர்பாக இறந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையோர் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கேரள அரசு இதை தொற்று நோயாகவும் தமிழக அரசு இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாகவும் அறிவித்துள்ளன[2].

2006ஆம் ஆண்டில் இலங்கையில் 100, 000 இற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர் [3]. இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் வாழும் வடக்குக் கிழக்கிலேயே இந்நோய்த்தாக்கம் கூடுதலாக அறியப்பட்டது பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பயணிகளினால் பரவியது [4] யாழ்ப்பாணத்தில் 20% மானவர்கள் பாதிக்கபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தெரிவித்தார்[5].

தற்பொழுது இந்த தீ நுண்மம் ஈடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) அல்லது புலிக் கொசு என்ற வகை கொசு மூலமூம் பரவும் என்று பாரிசில் உள்ள பாஸ்டர் கழகத்தில் கண்டறிந்துள்ளார்கள்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

இந்நோயின் பெயர் மகொன்டெ மொழியில் இருந்து வந்ததாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியினால் கை கால்கள் மடங்கி ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்கானிக்கா மற்றும் மோஸாம்பிக் இடையில் உள்ள மகொன்டெ பீடத்தில் 1952ஆம் ஆண்டு இந்த நோய் பரவியதை ஆராய்ந்த மரியன் ராபின்ஸ்டன் மற்றும் W.H.R.லூம்ஸ்டன் ஆகியோர் 1955ஆம் ஆன்டு இந்நோய் குறித்து விளக்கினார்கள்.

[தொகு] அறிகுறிகள்

மிகைக் காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 39 °C, (102.2 °F) அளவு வரைக்கும் காய்ச்சல் இருக்கக்கூடும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும், ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்.

[தொகு] பண்டுவம் (சிகிச்சை)

சிக்குன்குனியா நோய்க்கு என்று தனிப்பட்ட முறையில் இதுவரை மருந்துகள் ஏதும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இது குறித்த தடுப்பூசிச் சோதனைகள் செய்யப்பட்டாலும், ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டதால், தற்பொழுது தடுப்பூசிகள் ஏதும் இல்லை. இந்நோயை உறுதி செய்வதற்கான இரத்தப் பரிசோதனை முறையை குலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்நோய்க்கான மருந்தாக குளோரோகுவின் (Chloroquine) அமையக்கூடும் என்று உலகெங்கும் நடக்கும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நோய் தாக்கியவர்கள் மேலும் கொசுக்கடிக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் நோய் மற்றவர்களுக்குப் பரவுவத்தைக் குறைக்கலாம். இயன்ற வரை வீட்டுக்குள்ளே கொசுவலையின் பாதுகாப்புடன் இருத்தல் நலம் மின்விசிறிகளையும் (fan) கொசுவின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாவிக்கலாம். மூட்டு வலியின் போது பிறரின் கவனிப்புடன் கூடிய ஓய்வு மிகவும் அவசியமாகும். மிதமான உடற்பயிற்சிகளும் நகர்வும் மூட்டு முடக்கத்துக்கு இதமாக இருந்தாலும் கடினமான பயிற்சிகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக் கூடும்.

ஹோமியோபதி மருத்துவ முறையில் சிக்குன்குனியாவுக்கு மருந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இத்தகவல் இன்னும் அறிவியல் முறைப்படி உறுதி செய்யப்படவில்லை. பச்சிலைகளை கொண்டு பண்டுவம் செய்யும் யுனானி மருத்துவ முறை மருந்துகள் மூட்டு வலியைக் குறைப்பதாக கூறப்படுகிறது என்றாலும் இது சிக்குன்குனியாவுக்கு எதிர்ப்பான மருந்தா என்று உறுதி செய்யப்படவில்லை.

[தொகு] நோய்த் தடுப்பு

சிக்குன்குனியா தீ நுண்மங்களை கொண்டு திரியும் கொசுக்களிடம் இருந்து விலகி இருப்பது இந்நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். வீட்டுக்கு அருகில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் தேங்கிக் கிடக்கும் நீரில் DEET போன்ற கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதும் நோய் பரப்பும் கொசுக்களுக்கு இடம் தராமல் தடுக்கும். கை கால்களை மறைக்கும் நீளமான உடுப்புகளை அணிவதும் கதவு, சாளரங்களை திரையிட்டு மறைப்பதும் கொசுக் கடியைக் குறைக்கும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] உசாத்துணைகள்

THIS WEB:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2006: