சோவியத் ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் Союз Советских Социалистических Республик Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik |
|
குறிக்கோள்: Пролетарии всех стран, соединяйтесь! (ரஷ்ய மொழி: உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்) |
|
நாட்டு வணக்கம்: The Internationale (1922−1944) Hymn of the Soviet Union (1944-1991) |
|
தலைநகரம் | மாஸ்கோ |
பெரிய நகரம் | மாஸ்கோ |
ஆட்சி மொழி(கள்) | எதுவுமில்லை, ரஷ்ய மொழி (பயன்பாட்டில்) |
அரசு | சமூகவுடைமைக் குடியரசுகளின் கூட்டாட்சி |
- | - |
விடுதலை - புரட்சி - குடியரசுகளின் ஒன்றியமானது |
ரஷ்யப் பேரரசிலிருந்து டிசம்பர் 30, 1922 பெப்ரவரி 1, 1924 |
பரப்பளவு | |
- மொத்தம் | 22,402,200 km² கி.மீ.² (1 ஆவது, கலைப்புக்கு முன்) |
{{{areami²}}} சதுர மைல் | |
- நீர் (%) | ஏறத்தாள 0.5 |
மக்கள்தொகை | |
- ஜூலை 1991 மதிப்பீடு | 293,047,571 (3ஆவது, கலைப்புக்கு முன்) |
- - கணிப்பீடு | 1,027,015,247 |
- அடர்த்தி | 13.08/km²/கிமி² (-) {{{population_densitymi²}}}/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | - மதிப்பீடு |
- மொத்தம் | - (-) |
- ஆள்வீதம் | - (-) |
ம.வ.சு ({{{HDI_year}}}) | {{{HDI}}} ({{{HDI_rank}}}) – {{{HDI_category}}} |
நாணயம் | ரூபிள் (- ) |
நேர வலயம் | UTC +2 to +13 (modern Russia is +2 to +12) (ஒ.ச.நே.-) |
- கோடை (ப.சே.நே.) | |
இணைய குறி | - |
தொலைபேசி | +- |
சோவியத் ஒன்றியம் (Russian: Сове́тский Сою́з - Sovetskiy Soyuz) எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் (Russian: Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது 1922 தொடக்கம் 1991 வரை இருந்த ஒரு அதிகாரபூர்வ சமூகவுடைமை நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இலிருந்து 1991 இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.
இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இலிருந்து இது கலைக்கப்படும்வரை ஏறத்தாள ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை.
சோவியத் ஒன்றியம் பின்நாட்களில் உருவான பொதுவுடைமை நாடுகளுக்கான மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.