Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சிவாஜி கணேசன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிவாஜி கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,1959
தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,1959

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

[தொகு] திரைப்பட வாழ்க்கை

'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

[தொகு] அரசியல் வாழ்க்கை

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

[தொகு] விருதுகளும் கௌரவங்களும்

  • ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
  • பத்ம ஸ்ரீ விருது (1966)
  • பத்ம பூஷன் விருது (1984)
  • செவாலியே விருது (1994)
  • தாதா சாகேப் பால்கே விருது (1997)
  • 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.


[தொகு] நடித்த திரைப்படங்கள்

  • படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
  • மன்னவரு சின்னவரு (1999)
  • பூப்பறிக்க வருகிறோம் (1999)
  • என் ஆசை ராசாவே (1998)
  • ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
  • கோபுர தீபம் (1997)
  • ஒன்ஸ் மோர் (1997)
  • பசும்பொன் (1995)
  • எங்கிருந்தோ வந்தான் (1995)
  • பாரம்பரியம் (1993)
  • சின்ன மருமகள் (1992)
  • நாங்கள் (1992)
  • முதல் குரல் (1992)
  • க்னோக் அவுட் (1992)
  • தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
  • ஞானப் பறவை (1991)
  • காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
  • புதிய வானம் (1988)
  • என் தமிழ் என் மக்கள் (1988)
  • அன்புள்ள அப்பா (1987)
  • வீரபாண்டியன் (1987)
  • தாம்பத்தியம் (1987)
  • கிருஷ்ணன் வந்தான் (1987)
  • குடும்பம் ஒரு கோயில் (1987)
  • முத்துக்கள் மூன்று (1987)
  • ராஜ மரியாதை (1987)
  • ஜல்லிக்கட்டு (1987)
  • விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
  • தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
  • சாதனை (1986)
  • மண்ணுக்குள் வைரம் (1986)
  • லக்ஸ்மி வந்தாச்சு (1986)
  • ஆனந்தக் கண்ணீர் (1986)
  • விடுதலை (1986)
  • மருமகள் (1986)
  • முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
  • படிக்காதவன் (1985)
  • ராஜ ரிஷி (1985)
  • பந்தம் (1985)
  • நீதியின் நிழல் (1985)
  • படிக்காத பண்ணையார் (1985)
  • நாம் இருவர் (1985)
  • நேர்மை (1985)
  • இரு மேதைகள் (1984)
  • வாழ்க்கை (1984)
  • வம்ச விளக்கு (1984)
  • சரித்திர நாயகன் (1984)
  • சிரஞ்சீவி (1984)
  • எழுதாத சட்டங்கள் (1984)
  • தராசு (1984)
  • திருப்பம் (1984)
  • சிம்ம சொப்பனம் (1984)
  • தாவனிக் கனவுகள் (1983)
  • உருவங்கள் மாறலாம் (1983)
  • சுமங்கலி (1983)
  • சந்திப்பு (1983)
  • உண்மைகள் (1983)
  • மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
  • நீதிபதி (1983)
  • வெள்ளை ரோஜா (1983)
  • காஷ்மிர் காதலி (1983)
  • வசந்தத்தில் ஒரு நாள் (1982)
  • வா கண்ணா வா (1982)
  • தியாகி (1982)
  • துணை (1982)
  • தீர்ப்பு (1982)
  • சங்கிலி (1982)
  • பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
  • ஊரும் உறவும் (1982)
  • ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
  • நெஞ்சங்கள் (1982)
  • ஹிட்லர் உமாநாத் (1982)
  • கருடா சௌக்கியமா (1982)
  • லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
  • கீழ்வானம் சிவக்கும் (1981)
  • கல்தூன் (1981)
  • அமரகாவியம் (1981)
  • சத்ய சுந்தரம் (1981)
  • ரிஷி மூலம் (1980)
  • இரத்த பாசம் (1980)
  • விஷ்வரூபம் (1980)
  • எமனுக்கு எமன் (1980)
  • தர்ம ராஜா (1980)
  • மோகனப் புன்னகை (1980)
  • மாடி வீட்டு ஏழை (1980)
  • நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
  • வெற்றிக்கு ஒருவன் (1979)
  • திரிசூலம் (1979)
  • பட்டாகத்தி பைரவன் (1979)
  • நல்லதொரு குடும்பம் (1979)
  • நான் வாழவைப்பேன் (1979)
  • கவரி மான் (1979)
  • இமயம் (1979)
  • வாழ்க்கை அலைகள் (1978)
  • என்னைப் போல் ஒருவன் (1978)
  • ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
  • ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
  • பைலட் பிரேம்நாத் (1978)
  • தியாகம் (1978)
  • புண்ணிய பூமி (1978)
  • அந்தமான் காதலி (1977)
  • சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
  • அண்ணன் ஒரு கோயில் (1977)
  • தீபம் (1977)
  • இளைய தலைமுறை (1977)
  • நாம் பிறந்த மண் (1977)
  • அவன் ஒரு சரித்திரம் (1976)
  • உத்தமன் (1976)
  • உனக்காக நான் (1976)
  • சத்தியம் (1976)
  • ரோஜாவின் ராஜா (1976)
  • கிரகப் பிரவேசம் (1976)
  • டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
  • அன்பே ஆருயிரே (1975)
  • அவன் தான் மனிதன் (1975)
  • தங்கப்பதக்கம் (1974)
  • அன்பைத்தேடி (1974)
  • என் மகன் (1974)
  • தீர்க்க சுமங்கலி (1974)
  • பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
  • கௌரவம் (1973)
  • ராஜபாட் ரங்கதுரை
  • இராஜராஜசோழன் 1973)
  • பாரத விலாஸ் 1973)
  • பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
  • ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
  • வசந்த மாளிகை (1972)
  • நீதி (1972)
  • சவாலே சமாளி (1971)
  • மூன்று தெய்வங்கள் (1971)
  • சுமதி என் சுந்தரி (1971)
  • பாபு (1971)
  • குலமா குணமா (1971)
  • தங்கைக்காக (1971)
  • இரு துருவம் (1971)
  • வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஜயர் வேடம்
  • விளையாட்டுப் பிள்ளை (1970)
  • எங்கள் தங்கம் (1970)
  • எங்க மாமா (1970)
  • பாதுகாப்பு (1970)
  • காவல் தெய்வம் (1969)
  • தெய்வ மகன் (1969)
  • சிவந்த மண் (1969)
  • தங்கச் சுரங்கம் (1969)
  • குருதட்சனை (1969)
  • தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
  • உயர்ந்த மனிதன் (1968)
  • கௌரி (1968)
  • எங்க ஊரு ராஜா (1968)
  • திருமால் பெருமை (1968)
  • கலாட்டா கல்யாணம் (1968)
  • என் தம்பி (1968)
  • இரு மலர்கள் (1967)
  • கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
  • தங்கை (1967) .... மதன் வேடம்
  • திருவருட்செல்வர்(1967)
  • மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
  • மகாகவி காளிதாஸ் (1966)
  • செல்வம் (1966)
  • திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
  • சாந்தி (1965)
  • பழனி (1965)
  • அன்புக்கரங்கள் (1965)
  • புதிய பறவை (1964)
  • கை கொடுத்த தெய்வம் (1964)
  • நவராத்திரி (1964)
  • ராமதாசு (தெலுங்கு) (1964)
  • பச்சை விளக்கு (1964)
  • இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
  • கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
  • பார் மகளே பார் (1963)
  • ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
  • அறிவாளி (1963)
  • குலமகள் ராதை (1963)
  • குங்குமம் (1963)
  • அன்னை இல்லம் (1963)
  • பலே பாண்டியா (1962)
  • பார்த்தால் பசி தீரும் (1962)
  • பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
  • ஆலயமணி (1962)
  • நிச்சய தாம்பூலம் (1962)
  • படித்தால் மட்டும் போதுமா (1962)
  • வடிவுக்கு வளைகாப்பு (1962)
  • கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
  • பாலும் பழமும் (1961)
  • பாப்பா பரிகாரம் (1961)
  • பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
  • பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்
  • புனர் ஜென்மம் - (1961)
  • படிக்காத மேதை (1960)
  • பாவை விளக்கு (1960)
  • இரும்புத்திரை (1960)
  • தெய்வப் பிறவி (1960)
  • பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
  • மரகதம் (1959) .... வரேந்திரன்
  • வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
  • பாகப்பிரிவினை (1959)
  • தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
  • தங்கப்பதக்கம் (1959)
  • சபாஷ் மீனா (1958)
  • ஸ்கூல் மாஸ்டர் (1958)
  • சாரங்கதார (1958)
  • உத்தமபுத்திரன் (1958)
  • காத்தவராயன் (1958)
  • அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
  • மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
  • தங்கமலை இரகசியம் (1957)
  • வணங்காமுடி (1957)
  • தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
  • புதையல் (1957)
  • பாக்யவதி (1957)
  • அமரதீபம் (1956) .... அசோல்
  • பெண்ணின் பெருமை(1956)
  • ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
  • தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
  • கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
  • மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
  • முதல் தேதி (1955) .... சிவஞானம்
  • கூண்டுக்கிளி (1954)
  • அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
  • எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
  • மனோகரா (1954) .... மனோகரா வேடம்
  • அன்பு (1954)
  • பூங்கோதை (1954)
  • பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
  • பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
  • பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com