சாய்சதுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான்கு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாக அமைந்த நாற்கரம், சாய்சதுரம் எனப்படுகின்றது. இதனை சாய்க்கட்டம் என்றும் அழைப்பர். இவ்வடிவத்தின் கோணங்கள் செங்கோணங்களாக அமையும் போது சாய்சதுரத்தின் சிறப்பு வடிவங்களில் ஒன்றான சதுரம் பெறப்படுகின்றது. சாய்சதுரம் இணைகரத்தின் சிறப்பு வடிவங்களில் ஒன்றாகும்.