கால்டுவெல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கால்டுவெல் ஐயர் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
அயர்லாந்தில் பிறந்து கிளாஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்று பிறகு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கென்று 1838ல் சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். 1941ல் குரு பட்டம் பெற்று பின்னர் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணி செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னவர் இவர்தான்.
[தொகு] கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
- நற்கருணை தியான மாலை (1853)
- தாமரைத் தடாகம் (1871)
- ஞான ஸ்நானம் (கட்டுரை)
- நற்கருணை (கட்டுரை)
[தொகு] கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
- திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)