ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசெம்பர் 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர்களின் அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்பது இதன் தற்போதைய பெயரான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப் பட்டது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களிற்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
[தொகு] முக்கிய இலக்குக்கள்
கீழ் வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
- பெண் பிள்ளைகளின் கல்வி
- ஏற்பூசி ஏற்றல் (Immunization )
- HIV/ஏமக்குறைவு (AIDS)
- சிறுவரின் பாதுகாப்பு
- சிறார் பருவம் (Early childhood)
இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச்செய்வதற்கும், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.