ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள அபொரிஜினீஸ் (Aborigenes), மற்றும் டொரெஸ் ஸ்ட்ரெயிட் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் ஸ்ட்ரெயிட் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.
[தொகு] வரலாறு
[தொகு] ஆதிவாசிகளின் வருகை
இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் ஆதிவாசிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.
[தொகு] ஐரோப்பியரின் வருகை
1788இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் ஆதிவாசிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.