Wikipedia பேச்சு:விக்கிபீடியர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கவனிக்க- இங்கே அகரவரிசைப்பட்டியல், ஆங்கில அகரவரிசையை அடியொற்றி உள்ளது. இது குழப்பம் மிக்கதாகும். தமிழில் தனியான அகரவரிசைப்படுத்தல்க் தேவையற்றது/சிரமமானது என கருதினால், ஆங்கில பெயர்களையும் காண்பித்தல் நலம்.) இவ்வாறான மாற்றத்தை செய்யலாமா?
-தோழமையுடன், மு.மயூரன்
- மயூரன், இந்த விக்கிபீடியர்கள் பக்கத்தில் நாம் தான் தகவல்களை உள்ளிடுகிறோம் என்பதால் நாம் விரும்பும்படி அகர வரிசை உண்டாக்க முடியும். இதில் எந்த சிரமுமில்லை. பயனர் கணக்குகளின் தொடக்க எழுத்துக்களை கொண்டு பட்டியல் இடுவது சரியாக இருக்கும். பயனர்களின் உண்மையான பெயரை பயணர் பக்க இணைப்புக்கு அடுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தரலாம். பட்டியலை, முதலில் தமிழ் அகர வரிசை, அடுத்து ஆங்கில அகர வரிசை, இறுதியில் எண் வரிசை என அமைக்கலாம் எனக் கருதுகிறேன். சிறப்புப்பக்கங்களில் உள்ள பயனர் பட்டியல் மென்பொருளால் தானாக திரட்டப்படுவதால், அதில் மாற்றங்கள் செய்ய மீடியாவிக்கியை அணுக வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். அப்புறம், நீங்கள் உங்கள் செய்தியை உள்ளிட்ட பின் எப்படி கையெழுத்திடுவது என்பது பற்றி அறிய இந்தப்பக்கத்தை பார்க்கவும்.--ரவி (பேச்சு) 19:10, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
நன்றி ரவி. முடிந்தவரை இந்த அகரவரிசைப்படுத்தலுக்கு உதவுகிறேன். --மு.மயூரன் 07:47, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] மாற்றங்கள்
- தகவல்கள் இன்றைப்படுத்தப்பட்டுள்ளன.
- நாடுவாரியான பட்டியல் தனியாக உருவாக்கப்பட்டு, இப்பக்கம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- படிமம் சேர்க்கப்பட்டுள்ளது
- வகைப்படுத்தப்பட்டுள்ளது
ஆட்சோபனை இருந்தால் தெரிவியுங்கள். --Natkeeran 22:44, 18 மே 2006 (UTC)