தோற்றப்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தோற்றப்பாடு (Phenomenon) என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய பல சமயங்களில் சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும்.
அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடி தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும். இவற்றின் ஒரு எடுத்துக்காட்டே ஒளியியல் தோற்றப்பாடு ஆகும்.
மற்ற சில பின்வருவன.
- Anomalous phenomenon (parapsychology)
- உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்)
- வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்)
- மின் தோற்றப்பாடு (மின்சாரம்)
- Geological phenomenon (geology)
- நீரியல் தோற்றப்பாடு (நீரியல்)
- வானிலை தோற்றப்பாடு (வானிலை)
- ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்)
- இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்)
- புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்)
- வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்)
தத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.