கோலுரு நுண்ணுயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோலுரு நுண்ணுயிர்கள் (Bacteria) மிகப்பெரிய உயிரினக் குழுவாகும். பெரும்பாலான கோலுரு நுண்ணுயிர்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை கலக் கரு அற்று, பச்சையம், இழைமணிகள் போன்ற கலச் சிற்றுறுப்புகள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. கோலுரு நுண்ணுயிர்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர் என்று அனைத்து இடங்களிலும் வாழும் இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழ்கின்றன. நோய் விளைக்கும் நுண்ணுயிர்களில் பல கோலுரு நுண்ணுயிர்களாகும். இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 μm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை 0.5 மி.மீ அளவு வளரவல்லவை. தாவரங்கள், பூஞ்சைகள் போல் கோலுரு நுண்ணுயிர்களும் வழக்கமாக கலச் சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறக்குழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.
[தொகு] அருஞ்சொற்பொருள்
- இழைமணி - Mitochondrion
- கூட்டுயிரி - Symbiont
- நோய் விளைக்கும் நுண்ணுயிர் - Pathogen
- அடக்கக்கூறு - Composition
- நகரிழை - Flagellum