பயனர் பேச்சு:கோபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 |
[தொகு] நிர்வாகிப் பொறுப்பு
கோபி, Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/கோபி பக்கத்திற்கு சென்று, என் பரிந்துரையை ஏற்பதாகத் தெரியப்படுத்துங்கள்..அதன் பிறகு பிற பயனர்கள் வாக்களிப்பர். இது விக்கி நடைமுறை.--ரவி 08:25, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- நன்றி ரவி, என் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டேன். --கோபி 15:42, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] speed delete
அன்புள்ள கோபி, தற்போதைய வார்ப்புருவில் தேதி இல்லை. என்வே இந்த வார்ப்புருவை பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். வேறுபாட்டை இங்கு பார்க்கவும். --சிவகுமார் 16:28, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
பல விக்கிபீடியாக்கள் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு சகட்டு மேனிக்கு தரமற்ற கட்டுரைகளை உருவாக்கி வரும்பொழுது தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை கூட்டும் வண்ணம் பல கட்டுரைகளை தாங்கள் களையெடுத்து வருவது மிகவும் நன்று. நன்றி--ரவி 20:24, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] வாக்குச் சேகரிப்பு
விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:23, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] குறிப்பு
தாவரங்களின் அறிவியல் பெயர்களை சாய்வெழுத்துக்களில் தர வேண்டும். சுந்தர் இதற்காகத் தான் நடைக்கையேட்டை பார்க்க சொன்னார் என்று நினைக்கிறேன். மேற்படி காரணங்கள் இருந்தால் அவரே தெரிவிக்கலாம்--ரவி 16:49, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
- உண்மைதான். ஆனால் நான் மருத்துவ குணங்கள் என இணைத்தவை நீக்கப்பட்டிருந்ததால் தான் குழம்பிப் போனேன். அது தொடர்பில் ஏதாவது தவறான உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளேனோ என்பதே எனது குழப்பமாகும். --கோபி 16:52, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, சுந்தர் மருத்துவ குணங்களை நீக்கியதை நானும் பார்த்தேன். எனக்கும் விளங்க வில்லை. தவறுதலாகவும் நிகழ்ந்திருக்கலாம். தற்போதைக்கு மூலிகைகள் கட்டுரையில் மருத்துவ குணங்களை மாற்றி எழுதச் சிரம பட வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். (பின்னர், ஆதாரங்களின்றி போனால், உங்கள் பங்களிப்பையும் நீக்க வேண்டி வரும்..!)இக்கட்டுரைகள் அனைத்தும் சிங்கப்பூர் பள்ளி சிறுவர் ஒருவரால் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. மொத்தப் பகுப்புக்குமே பெரிய அளவில் துப்புரவு தேவைப்படுகிறது. என்னால் இயன்ற அளவு உதவுகிறேன். இதில் உள்ள பல தாவரங்களை மூலிகைகள் என்ற குறுகிய பகுப்பில் அடக்குவது பிழை. பலவும் முக்கியத்துவம் வாய்ந்த விரித்து எழுதப்பட வேண்டிய தாவரங்கள்.--ரவி 16:58, 28 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] நமது கொழும்பு சந்திப்பு
இன்று 5 மணிக்கு சந்திப்பதாக உத்தேசித்து இருந்தபோதும் என்னால் வரமுடியாமல் உள்ளது. எனக்கு இன்று மைக்ராசாஃப்ட் .நெட் சம்பந்தமான பிராஜக்ட் ஒன்று பற்றி கலந்தாலோசனை செய்ய கிரிபத்கொட செல்கின்றேன். வேறு ஒரு தினத்தில் சந்திக்கலாம் இதை மயூரனுக்கும் அறிவிக்கவும்.--ஜெ.மயூரேசன் 07:04, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] வார்ப்புரு மாற்றங்கள்
நீங்கள் வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் இதழாசிரியர் என்று ஏற்படுத்திய மாற்றம் சரியானதே. எனினும் அவ்வார்ப்புரு பயன்படுத்தப்பட்ட கட்டுரைகளிலும் தகுந்த மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதை கவனித்தில் கொள்க. அதை யாரும் செய்யலாம், ஆனால் உங்கள் கவனத்தில் கொண்டுவருவதே இக்குறிப்பின் நோக்கம். நன்றி. --Natkeeran 19:34, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] படிமங்களை வகைப்படுத்துதல்
தொடர்புடைய சுட்டியை தாருங்கள். நன்றி. --Natkeeran 19:42, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி. சற்று அலசி விட்டு இவ்விடயம் நோக்கி மேலும் பின்னர் பகிர்கின்றேன். --Natkeeran 19:54, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] சாய்வெழுத்துக்கள்
கோபி, நேரமின்மையால் நான் சுருக்கமாகத் தெரிவித்த வேண்டுகோளைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. உங்கள் அண்மைய பங்களிப்புகள் வியத்தகு வேகத்தில் அமைந்துள்ளன. பணி தொடரட்டும். -- Sundar \பேச்சு 06:19, 30 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] நிர்வாகி அணுக்கம்
கோபி, உங்களுக்கு நிர்வாகி தரத்துக்கானஅணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் செய்யும் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். Mayooranathan 19:16, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
- தங்களின் அயராத பணிகள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். நிர்வாக அணுக்கத்தை ஏற்படுத்திய மயூரநாதனிற்கும் மனமார்ந்த நன்றிகள். --Umapathy 19:26, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
-
- நன்றி மயூரநாதன், உமாபதி. ஆதரவு தெரிவித்து வாக்களித்த மயூரேசன், சுந்தர், கனக சிறீதரன், சிவகுமார், நற்கீரன், டெரன்ஸ், உமாபதி ஆகியோருக்கும் நிர்வாகி அணுக்கம் பெறத் தூண்டிய ரவிக்கும், மற்றும் நற்கீரனுக்கும் எனது நன்றிகள்.--கோபி 19:57, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, நீங்கள் விரும்பிக் கேட்டபடி செப்டம்பர் 1 அன்று நிர்வாகியாக்கும்படி சுந்தரிடமும் மயூரனாதனிடமும் வேண்டியிருந்தேன். ஆனால், இன்றே ஆக்கி விட்டார் :)..பரவாயில்லை..ஜப்பான் நேரப்படி செப்டம்பர 1 என்று வைத்துக்கொள்ளலாம் தானே :) இனி விக்கிபீடியாவில் எனது நீக்கல் பங்களிப்புகள் குறையும் ;) மீடியாவிக்கி பக்கங்களையும் தற்பொழுது நீங்கள் தொகுக்க இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி--ரவி 20:57, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, வாழ்த்துக்கள். வந்த கையோட நிறைய (அவசியமான) நீக்கல்கள் செய்துள்ளீர்கள். விக்கிபீடியா பக்கங்கள் துப்பரவாக்கும் பணி தொடரட்டும்.--Kanags 03:25, 2 செப்டெம்பர் 2006 (UTC)
-
- ரவி, அந்நேரம் இலங்கை நேரப்படியும் செப்டெம்பர் 1 தான். :-) நான் அந்தளவு எண்சாத்திர நம்பிக்கையுடையவனல்ல.. kanags, நன்றி. என்னாலியன்ற சிறு பங்களிப்பைச் செய்தேன். ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகளைத் தேடும்போது குறிப்பாகப் பெயர்கள் போன்றவற்றைத் தேடும்போது சரியான spelling தெரியாவிட்டால் அகரவரிசைப் பட்டியலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இப்போது தமிழ்விக்கிபீடியாவில் தேடுவது இலகுதான். ஆனால் ஒரு 200,000 கட்டுரைகள் வந்தபின்னர் அகரவரிசையும் தேவைப்படும். இப்பொழுதே தேவையற்ற redirect களை நீக்கிவந்தாற்தான் அப்போது தேட இலகுவாயிருக்கும் என நினைக்கிறேன். கோபி 16:05, 2 செப்டெம்பர் 2006 (UTC)
கோபி, உங்கள் பணி சரி தான். போன ஆண்டு இது போன்று தேவையற்ற வழிமாற்றுகளை நீக்கும் வேலையை செய்து வந்தேன். ஒரு வேளை, நீங்கள் அகர வரிசைப் பட்டியலில் இருந்து வழிமாற்றுகளை கண்டுபிடித்துக்கொண்டிருந்தால், அதைவிட இந்த சிறப்புப் பக்கத்தை பயன்படுத்துவது உங்கள் வேலையை மிச்சமாக்கும். இந்த சிறப்புப் பக்கமும் பயனுள்ளது.--ரவி 10:59, 3 செப்டெம்பர் 2006 (UTC)
-
- தகவலுக்கு நன்றி ரவி. --கோபி 16:19, 3 செப்டெம்பர் 2006 (UTC)
நிர்வாகியாகிவிட்ட கோபிக்கு நன்றிகள். நின் பணி தொடர வாழ்த்துக்கள். ;)--ஜெ.மயூரேசன் 04:03, 4 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] geo-stub
கோபி, வார்ப்புரு:geo-stub பல கட்டுரைகளில் இணைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது காணாமல் போய்விட்டது. பல கட்டுரைகளில் சிகப்பு இணைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இதை நீங்கள் இதை அழித்திருந்தால் காரணம் அறியலாமா?--ரவி 14:22, 6 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுப் பின்னர் தமிழுக்கு நகர்த்தப்பட்டிருந்த வழிமாற்றிகளையே அழித்தேன். அப்பொழுது தவறாகவே geo-stub இனையும் அழித்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி --கோபி 15:41, 6 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] ஆங்கிலத் தலைப்புக்கள்
கோபி நான் கூகிள் ஏர்த் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றேன் பல இடங்களை கூகிள் ஏர்த்தில் உருவாக்கிப் பின்னர் பலரும் பார்க்கக் கூடியவண்ணமாக விக்கிப்பீடியாவுடன் இணைப்புக்களை ஏற்படுத்தி வருகின்றேன். எனது வேலைகளைப் பார்வையிட விரும்பினால் நீங்கள் கூகிள் ஏர்த் பாவிப்பவராக இருந்தால் திருகோணமலையை நகரத்தை zoom பண்ணிப் பார்க்கவும் (எனது விக்கிப்பீடியாவிற்கான இணைப்பு வேலையைப் பார்பதற்கு google earth community layer tick பண்ணப் பட்டிருத்தல் வேண்டும் கூகிள் ஏர்த் மென்பொருளின் இது இடது பக்கக் கீழ் மூலையில் உள்ளது). பிரச்சினை என்னவென்றால் இப்போதைக்கு கூகிள் ஏர்த்தில் தமிழ்த் தலைப்பிற்கு நேரடியாக இணைப்புக் கொடுக்கமுடியாது இது சம்பந்தமாக கூகிளிடம் முறைப்பாடு செய்திருந்தேன் உரிய பதிலெதுவும் கிடைக்கவில்லை ஓர் தன்னியங்கிப் பதில் மாத்திரமே கிடைத்தது. இப்போதைக்கு ஆங்கிலத் தலைப்பு வழிமாற்றிகளை நீக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஏனெனில் ஆங்கிலத் தலைப்பை கூகிள் ஏர்த்தில் இருந்து இணைக்க இயலும். நன்றி --Umapathy 16:21, 11 செப்டெம்பர் 2006 (UTC)
கூகுள் ஏர்த் இல் தமிழ் இல்லையென்பதற்காக ஆங்கிலத்தில் வழிமாற்றிகளை வைத்திருக்க வேண்டும் என்பதை என்னால் விளங்க்கிக் கொள்ள முடியவில்லை. வழிமாற்றிகளின் தேவை கட்டுரைகளை இலகுவில் தேடியடைவதற்காகவே என்றே விளங்கி வைத்திருக்கிறேன். விடயமறிந்த பயனர்கள் தான் பதில்கூற வேண்டும். --கோபி 17:07, 11 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] குறுங்கட்டுரை
கோபி, ஊருக்குப் போயிருந்ததால் கடந்த மூன்று நாட்களாக பங்களிக்க முடியவில்லை. என்னால் இயன்ற வரை அக்குறுங்கட்டுரைகளை விரிவாக்குகிறேன். --Sivakumar \பேச்சு 11:35, 13 செப்டெம்பர் 2006 (UTC)
கிறிஸ்த்து குறுங்கட்டுரைக்கு இரண்டு பத்தியளவு சேர்த்து விட்டேன் விரைவில் முழுக்கட்டுரையாக மாற்றிவிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி--டெரன்ஸ் \பேச்சு 06:57, 21 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] நீக்கும் போது கவனிக்கத்தக்கது
கட்டுரைகளை நீக்கும் போது பெறுமதி வாய்ந்த தகவலை தகுந்த இடத்தில் பிரதி செய்வது நன்று. அப்படியே நீங்க செய்து வருவதாக நினைக்கின்றேன். நன்றி. --Natkeeran 19:39, 13 செப்டெம்பர் 2006 (UTC)
- எனக்குத் தெரிந்த அளவில் அவ்வாறே செய்து வருகிறேன். நான் நீக்கியவற்றுள் மூலிகைகள் தொடர்பான (பூக்கள்) கட்டுரைகளின் உள்ளடக்கத்தையே பிரதி செய்யவில்லை. அவற்றுக்குப் போதிய ஆதாரம் இருப்பதாகத் தெரியாததாலேயே முழுமையாக நீக்கினேன். தவறெனின் சுட்டிக் காட்டவும். நன்றி. --கோபி 19:42, 13 செப்டெம்பர் 2006 (UTC)
கோபி, பின்வரும் தலைப்புகளை நீக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன். (தலைப்புகளில் எழுத்துப்பிழையுள்ளவை):
- ஸ்ரீ பொன்னம்பலவேணேஸ்வரர் ஆலயம்
- ஆபிரகாம் டி.கோவூர்
நன்றி. --Kanags 07:40, 23 செப்டெம்பர் 2006 (UTC)
- கோபி Kanags வேண்டுகோளுக்கமைய கோரப்பட்ட பக்கங்களை நீக்கியுள்ளேன். --Umapathy 07:52, 23 செப்டெம்பர் 2006 (UTC)
- விக்கிபீடியா தர கண்காணிப்பில் உமாபதியின் கருத்தைக் கவனிக்கவும். தமிழ் விக்கிபீடியாவும் கூகுலும்
--Natkeeran 21:37, 25 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] விரிவாக்குவது
கோபி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பொருள் இலக்கணம் பற்றிய குறுங்கட்டுரையை விரிவு படுத்துகிறேன். தமிழின் தனிச்சிறப்பு வாய்ந்த இலக்கணம் இது. குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி.--C.R.Selvakumar 13:52, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
[தொகு] உங்கள் குறிப்புகளில்
உங்கள் குறிப்புகளில் உள் இணைப்புகளை நேரடியாக தந்தால், அதை பின்பற்றி சென்று மாற்றங்கள் செய்வதற்கு சுலபமாக இருக்கும். இல்லாவிட்டால் அவற்றை தேடி பிடிக்கவேண்டும். நன்றி. --Natkeeran 19:31, 3 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] நன்றி.
--Natkeeran 16:19, 24 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] hi
sorry, I can't read tamil, and thus I cannot read your messages. --Soman 16:31, 31 அக்டோபர் 2006 (UTC) I'm creating articles on the basis of en:User:Soman/Lang-Help-ta. I'll try to shift as many articles to tamil names as possible, but there are some that I simply can't translate due to lack of knowledge of tamil grammar. sinc.,
[தொகு] படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்
கோபி, உங்களுக்கு தெரிந்த இத்தோடு தொடர்புடைய வார்ப்புருக்களையும், தகவல்களையும் சேருங்கள். நன்றி. படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் --Natkeeran 22:05, 4 நவம்பர் 2006 (UTC)
[தொகு] தொடர்பியல் தொழில்நுட்பம் தொடர்பாடல்
எனது தனிப்பட்ட கருத்தில் இயன்றவரைக்கும் தாய்ப் பகுப்புக்கள் இரண்டில் ஒரு பகுப்பை சேர்க்காமல் இருப்பது நன்று. அதற்கிணைய தொடர்பியல் தொழில்நுட்பம், தொடர்பாடல் என்று இரு பகுப்புக்களை தொடங்கலாமா? தொடர்பாடல் சமூகவியல் புலத்தில் ஆயும் விடயங்கள் வேறு. --Natkeeran 16:57, 5 நவம்பர் 2006 (UTC)
[தொகு] த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்
கோபி மேற் குறிப்பிட்ட தலைப்புடைய தகவல் நகர்தப்பட்டதற்கு தகுந்தகாரணம் என்ன?அறிய விரும்புகின்றேன்.இம் மாற்றத்தில் எனக்கு ஒப்பில்லை.ஒரு நாவல் எவ்வாறு புதினமாகும் மேலும் நூல் தகவல் சட்டம் எனும் வார்ப்புரு தொழிற்படுகின்றதா?என கவனிக்கவும். இன்னனும் ஆங்கிலவிக்கிக்கு link கொடுக்கவில்லை உங்களின் கருத்தின்பின் மேற்கொள்ள உத்தேசித்திருக்கின்றேன்--கலாநிதி 18:39, 9 நவம்பர் 2006 (UTC)
மறுமொழிக்கு நன்றி.அதுதான் விக்கியின் பொது கொள்கை எனின் பிரச்சனை இல்லை.எழுத்தாளர் பற்றிய கட்டுரைகளில் நாவலா?புதினமா?எந்த சொல் புழக்கத்தில் இருக்கின்றது என்பதனை முதலில் கவனிக்கவேண்டும்.மேலும் நூல் தகவல் சட்டம் எனும் வார்ப்புரு தொழிற்படுகின்றா என கவனிக்கவும்.நாளை பார்க்கலாம்--கலாநிதி 18:56, 9 நவம்பர் 2006 (UTC)
[தொகு] நன்றி.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இப்ப சரிதானே...
--Natkeeran 18:05, 10 நவம்பர் 2006 (UTC)
[தொகு] அமெரிக்க மாநிலங்கள்.
கோபி, அமெரிக்க மாநிலத் தொடர் கட்டுரைகள் தேவையான குறைந்தபட்சத் தகவல்களை கொண்டுள்ளது. நன்று. அத்தோடு, இம்மாநிலங்களின் இருப்பிடத்தைக் காட்டும் படிமத்தை இணைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த மாநிலம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று பல முறை குழம்பி இருக்கிறேன்--Ravidreams 16:13, 11 நவம்பர் 2006 (UTC)
[தொகு] காலநிலை?
தங்களுடைய மாநிலங்கள் பற்றிய கட்டுரைகளில் 'climate' என்பதற்கு 'காலநிலை'யைப் பயன்படுத்தியுள்ளீர்கள். 'தட்பவெட்ப்பம்' என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். இவ்வாறு மாற்ற விரும்பினால் தெரியப்படுத்தவும்.
பாலாஜி 21:59, 11 நவம்பர் 2006 (UTC)
காலநிலை பற்றிய உங்கள் கருத்தைப் படித்தேன். தாங்கள் 'standard time (as in IST or UTC)' என்பதற்கு என்ன சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்?
பாலாஜி 16:53, 14 நவம்பர் 2006 (UTC)
[தொகு] குறிப்பு
கோபி, கட்டுரையில் ஆங்கில விக்கி இணைப்பு இருந்தால் மட்டும் கூடப் போதுமானது. பிறவற்றை சேர்க்கும் வேலையை சுந்தர்பாட் செய்யும்--Ravidreams 18:34, 13 நவம்பர் 2006 (UTC)
தமிழ் கட்டுரையில் ஆங்கில விக்கிக்கான இணைப்பு மட்டும் இருந்தால் போதும். பிற விக்கி இணைப்பை சுந்தர்பாட் இங்கு சேர்ப்பதோடு, தமிழ் விக்கிக்கான இணைப்பை ஆங்கில விக்கியிலும் சேர்த்துவிடும். இது தவிர ஏகப்பட்ட விக்கியிடை தானியங்கிகள் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றன. பயனர் பட்டியலில் தானியங்கிகளைத் தேர்ந்து எடுத்துப் பார்க்கலாம். மனிதர்களுக்குத் தான் இங்க பஞ்சம் :(--Ravidreams 18:53, 13 நவம்பர் 2006 (UTC)
கோபி, அந்த விஷமத் தொகுப்பை சரி செஞ்சாச்சு. அந்தப் பக்கம் தனக்குத் தானே வழிமாற்றிக் கொண்டிருந்தது தான் பக்கத்தை முன்னிலைப்படுத்த முடியாத குழப்பத்துக்கு காரணம். இது போன்ற சமயத்தில் வரலாற்றில் உள்ள கடைசி பழைய நல்ல தொகுப்புச் சென்று அதன் தொகுப்புப் பார்வையை பார்த்து மாற்றம் ஒன்றும் செய்யாமல் சேமிக்க வேண்டும். பழைய தொகுப்புப் பக்கத்தை பார்க்கும்போது விக்கிபீடியா ஒரு எச்சரிக்கை தரும். கண்டுகொள்ளாமல் முன்னிலைப்படுத்த வேண்டும் :)--Ravidreams 18:44, 14 நவம்பர் 2006 (UTC)
-
- நன்றி ரவி - --கோபி 18:48, 14 நவம்பர் 2006 (UTC)
கோபி, முதல் வரியில படிமத்துக்கு அடுத்து இடம் விடுவது நல்லது தான். ஆனால், பிறத் தொகுப்புகள் செய்யும்போது இதையும் சேர்த்து செய்யலாமே? தனியே இதை மட்டும் தொகுப்பாக செய்வது நேரம் வீண் தானே? அவ்வளவு அவசரமான தொகுப்ப இது தெரியல..சும்மா சொல்றேன்..கோவிச்சுக்க வேணாம்..--Ravidreams 16:19, 15 நவம்பர் 2006 (UTC)
-
- ரவி, நான் எந்த இடத்தில் அவ்வாறு செய்தேன் என்பதைச் சுட்டிக் காட்டுங்களேன். ஏனென்றால் முதல் வரியில் படிமத்துக்கு அடுத்து இடம் விட்டுள்ளதா இல்லை என்பதைத் தொகுப்புப் பார்வையில் தான் காண முடியும். ஆதலால் வேறு ஏதாவது ஒரு மாற்றஞ் செய்வதற்காகவே தொகுக்கத் தொடங்கினேன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு இடைவெளி விடுவதற்காக தொகுத்திருக்க வாய்ப்பில்லை.... --கோபி 16:24, 15 நவம்பர் 2006 (UTC)
மன்னிச்சுக்குங்க கோபி, கலைவாணர் கட்டுரையின் மாற்றத்தை டக்குனு பார்த்தப்ப அப்படி தோணுச்சு. இப்ப தான் அதில் நீங்க உள்ளிணைப்பு மாற்றங்கள் செஞ்சிருக்கிறது தெரிஞ்சுச்சு. பொதுவா, நான் பல தொகுப்புகளை ஒன்னா சேர்த்து செய்யுறதும், சிறிய மாற்றம்னா அத ஒத்தி வைக்கிறதும் வழக்கம். அது தான் சொன்னேன். --Ravidreams 16:35, 15 நவம்பர் 2006 (UTC)
சரி கோபி..நான் மன்னிச்சுக்குங்கன்னு சென்னை வழக்கில் ;) சொன்னேன். இங்க freeயா விடு அப்படிம்பாங்க !--Ravidreams 17:38, 15 நவம்பர் 2006 (UTC)
[தொகு] பட்டியல்கள்
கோபி, உங்கள் அவதானத்துக்கும் கருத்துக்களுக்கு நன்றி. பட்டியல்கள் அளவில் சிறிதாக, அதாவது நினைவக அளவில் சிறிதாக இருப்பது அவற்றின் இயல்பு. அந்த அளவை வைத்து பட்டியல்களின் பயன்பாட்டை நாம் மதிப்பிட முடியாது. அதேவேளை ஒன்றாக தரக்கூடிய பட்டியல்களை பிரித்து தருவதும் அவ்வளவு பொருத்தம் இல்லை. சில வேளைகளில் கட்டுரைகளுடன் பட்டியல்கள் ஒன்றாக வரலாம்.
நீங்கள் குறிப்பிட்ட உணவுகள் பட்டியல்கள் வளரக்கூடியவை, ஒவ்வொன்றும் ஒரு பகுப்புக்குள் வரகூடியது, முதலில் ஒன்றாக இருந்து பின்னர் வேறு வேறாக ஆக்கப்பட்ட பட்டியல்கள். மற்றைய சில பட்டியல்கள் ஒரு கட்டுரைக்குள் அடங்க கூடியவை. அவற்றை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும், பின்னர் விரிவாக பார்க்கலாம்...--Natkeeran 17:18, 21 நவம்பர் 2006 (UTC)
[தொகு] சில எண்ணங்கள்
விக்கிபீடியா போன்ற திறந்தநிலையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் சாத்தியங்கள் மிக அதிகம்தான். ஆனால் நீண்ட உரையாடல்கள் சலிப்பூட்டுகின்றன. யாரும் விக்கிபீடியாவை நம்பியில்லை; விக்கிபீடியாவும் யாரையும் நம்பியில்லை என்பது ஆறுதலளிக்கிறது.. இலக்குகள் நிர்ணயித்துச் செய்ற்படுவதென்பது ஒரு செயற்றிட்டத்துக்கு நல்லதுதான். ஆனால் தனிமரம் தோப்பாகாது. கலைக்களஞ்சியத்தரம் பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காவிடின் விக்கிபீடியாவுக்கான உழைப்பு பயனற்றதொன்றாகிறது. தரம் பேணுவதற்காக பயனற்ற நீண்ட உரையாடல்களால் ஆகப்போவதொன்றுமில்லை. ஆனால் ஓரிரு கட்டுரைகள் நம்பகத்தன்மையற்றவையாயிருந்தாலும் மொத்தத் திட்டத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. அப்படியாயின் பயனர்களின் உழைப்பும் வீண்தான். இணையம் என்பது விக்கிபீடியா மட்டுமல்ல. அதற்கப்பாலும் என்பதை மறக்காதிருக்க வேண்டியிருக்கிறது. --கோபி 19:25, 2 டிசம்பர் 2006 (UTC)
- தரம் பேணல், விக்கியாக்கம், நடுநிலைமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் போன்ற விதயங்களுக்கு தனி ஆளாக முட்டி மோத வேண்டி இருக்கையில் சலிப்பும் சோர்வும் நேர்வது உண்மை தான். என்ன செய்யலாம் ;(? இன்னும் சிலர் விரைவில் இணைவர் என்று எதிர்பார்த்திருக்க வேண்டியது தான் !!!--Ravidreams 21:21, 2 டிசம்பர் 2006 (UTC)
-
- நீங்கள் தனி ஆளாக இருப்பாதாக உணராதீர்கள். பலர் இத்திட்டத்தில் இணைந்துள்ளார்கள். சற்று விரிவாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review பேச்சு பக்கத்தில் சேருங்கள். நன்றி. --Natkeeran 01:45, 3 டிசம்பர் 2006 (UTC)
-
-
- கோபி, ஆம் நற்கீரன் கூறுவதைப் போன்று பயனர்கள் நம்பிக்கையிலேயே இணைந்துள்ளார்கள். இது ஓர் சமூக முன்னெடுப்பே. பாடசாலைக்காலத்தில் வகுப்பறைகளில் பலவிதமான மாணவர்கள் இருப்பார்கள் சிலர் குழப்படி பண்ணுவார்கள் சிலரோ எல்லாருடனுமே கதைத்துக் (பேசிக்) கொண்டிருப்பாகள் சிலர் விளையாட்டுக்களில் கூடுதல் கவனும் செலுத்துவார்கள் வேறுசிலர் கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்துவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதியசத்தைக் கொண்டிருப்பர். எல்லாரும் ஒரே மாதிராயாக இருக்கமுடியாது. முன்னர் நான் ஓர் சமாதானப் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டபோது எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தால் இரண்டாவது நபர் தேவையில்லை. ஆங்கிலவிக்கிபீடியாவில் பொருத்தமில்லாததை Uncyclopedia இல் போட்டுவிடுகின்றார்கள் நமக்கு இன்னமும் அந்த வசதியில்லை. விக்கிபீடியாவிலே சிறந்த பல கட்டுரைகள் நிச்சயமாக உள்ளன. எடுத்துக்காட்டாக மயூரநாதன் எழுதிய கட்டிடக் கலைகள் சம்பந்தமான கட்டுரைகள் இங்கேயுள்ளன. மட்டக்களப்பில் இருந்து கலாநிதியும் சிறப்பாக முகாமைத்துவம் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதி வருகின்றார். செல்வா அவ்வப்போதே வந்துபோனாலும் தமிழில் தரமான உரைநடையுடன் கட்டுரைகளை எழுதியுள்ளார்எழில்நிலா.காம் இணையத்தளம், முகுந்தராஜ், மயூரன், மயூரேசனின் வலைப்பதிவு தவிர அநேகமான கணினி சார்ந்த கட்டுரைகள் இங்கேயே உள்ளன. பலதுறைகளில் கட்டுரைகளை எழுதும் நீங்கள் மற்றும் நற்கீரன் ஆகியவர்கள் மிகவும் சிறப்பாகவும் நம்பிக்கையாகவும். செயற்படுவது எனக்கு மகிழ்சியை அளிக்கின்றது. ரவியும் முதற்பக்கத்தை மேமபடுத்தி வருகின்றார். சிவகுமாரும், பாலாஜியும் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதோடு கட்டுரைக்ளையும் மேம்படுத்தி வருகின்றனர். யாகூ! மற்றும் கூகிள் தேடுபொறிகளில் கட்டுரைகளைத் தேடினால் அநேகமாக விக்கிபீடியாக் கட்டுரைகளே முதன்மை பெறுகின்றன. இவை எல்லாம் ஓர் ஆர்வமூட்டும் நிகழ்வுகள். ஒருசில கட்டுரைகள் தரக் குறைவாக உள்ளதும் உண்மைதான். நாம் தனியார் நிறுவனங்களில் செய்வது போன்று "Hire and Fire" அதாவது வேலைக்கு ஆட்களைச் செர்ப்பதும் ஏதாவது கருத்து முரண்பாடுகள் என்றால் நீக்கிவிடுவதையும் இங்கே செய்வது என்பது கடினமான காரியம். --Umapathy 03:03, 3 டிசம்பர் 2006 (UTC)
-
[தொகு] வேண்டுகோள்
நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தாலும் அன்றாட நாட்களுக்கான கட்டுரைகளை தொடர்ந்து சற்று முன்கூட்டியே கவனித்து மேம்படுத்தினீர்கள் என்றால் முதற்பக்கத்தில் இன்னும் தகவற் செறிவோடு காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும். விக்கிபீடியா உள்ள மட்டும் முதற்பக்கத்தில் இன்றைய நாள் குறித்த கட்டுரைகள் வரும். அப்படிப்பட்ட முக்கியமான கட்டுரைகளை நீங்களும் கனக்சும் முன்முயற்சி எடுத்து உருவாக்கியது நன்று. ஆக, உங்களின் கட்டுரை ஒன்று இனி தினம் முதற்பக்கத்தில் வரும். அப்புறம், கொஞ்ச நாளாகவே விக்கிபீடியாவில் புதுக் கட்டுரைகளை அதிகம் காணாமல் சுணக்கமா இருக்கு. நானும் என்னால் முடிஞ்ச அளவு அசின், பாவனா-னு எழுதிப்பார்த்துட்டேன். விரைவில் உங்க பாணியில் ;) மளமளவென சில கட்டுரைகளை சேர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் ;)--Ravidreams 22:14, 9 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] ஆண்டு அறிக்கை
கோபி, உங்கள் விமர்சங்களையும், எதிபார்ப்புக்களையும், திட்டங்களையும் Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி தந்தால் நன்று. நன்றி. --Natkeeran 02:37, 10 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] சற்றுப்பொறுமை காக்க
நீங்கள் அனைத்துக்கட்டுரைகளிற்கும் speed delete இடுகின்றீர்களா இல்லை பைட்ஸ் குறைந்ததாகவுள்ளவற்றிற்கு அவ்வாறு இடுகின்றீர்களா மேலும் எத்தனை பைட்ஸ் க்கு மேலே ஒரு கட்டுரை இருக்க வேண்டும் சற்று விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 18:43, 12 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] பார்க்க
கோபி, பார்க்க படிமப் பேச்சு:Columbus.jpg. அப்புறம் நீங்களும் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளின்...வார்ப்புரு இட்டுட்டீங்களே ;(--Ravidreams 19:43, 12 டிசம்பர் 2006 (UTC).
[தொகு] ஒரு திருத்தம்
கோபி, நீங்கள் நான் 'சாதி' கட்டுரையில், ஜாதி என் ஒரு முறை எழுதினேன். அதை மாற்றி நீங்கள் சாதி என எழுதியுளீர். தமிழ் கூகிளில் ஜாதி என போட்டு தேடி பாருங்கள் http://www.google.com/search?q=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&hl=ta&lr=&start=20&sa=N
9000+ விடைகள் கிடைக்கும். இலக்கிய ஏடுகள் கூட அப்படி எழுதுகிறன. அப்படியிருக்க ஜாதி என எழுதுவதில் தப்பில்லை.--விஜயராகவன் 20:35, 12 டிசம்பர் 2006 (UTC).
விஜயராகவன் கவனிக்க. ஜாதி என்று எழுதுவதும் புழக்கத்தில் உள்ளது.தப்பில்லை.ஆனால், அதை சாதி என்று எழுதுவது சரி தான். தவிர்க்க முடிந்த இடங்களை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது தமிழ் விக்கிபீடியா கொள்கை. ஜாதி என்று வழிமாற்றுப் பக்கம் உருவாக்கலாம்--Ravidreams 20:44, 12 டிசம்பர் 2006 (UTC).
ரவி, ஏன் தப்பிலாட புழக்கங்களை மாற்ற வேண்டும்? அது ஒரு பக்கம் சரீன்றீங்க, அடுத்த வாக்கியமே சாதி 'தான்' சரீன்றிங்க. நீங்க சொல்லுகிற கொள்கை எங்கேயாவது தீர்மானமாகியுள்ளதா? நாம் ஏன் பத்திரிக்கையில், இலக்கியங்களில் பயன் படுத்தர சொல்லெல்லாம் தவறாக்க வேண்டும்? நமக்கு என்ன உரிமையிருக்கு?--விஜயராகவன் 21:09, 12 டிசம்பர் 2006 (UTC)
-
- முடிந்தவரை கிரந்த எழுத்துக்களையும் வடசொற்களையும் தவிர்ப்பது த.வி. கொள்கை. பரவலான பயன்பாடுடையவற்றுக்கு உரிய வழிமாற்றிப் பக்கங்களும் உருவாக்கப்படுகின்றன. கோபி 15:45, 13 டிசம்பர் 2006 (UTC).
- மோற்கொண்ட கொள்கையைக் கொண்ட த.வி. கொள்கைகள் பக்கம் எது?--விஜயராகவன் 15:59, 13 டிசம்பர் 2006 (UTC)
அத்தகைய கொள்கைப் பக்கம் எதுவெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவ்வாறே தொடர்ந்து பங்களித்து வருகிறோம். ஏதாவது பேச்சுப் பக்கங்களில் உரையாடப்பட்டிருக்கலாம். கொள்கைப் பக்கம் இல்லையெனில் உரிய பக்கத்தை உருவாக்க வேண்டும். அல்லது பொருத்தமான பக்கமொன்றில் இக்கொள்கையை இணைக்க வேண்டும். கோபி 16:15, 13 டிசம்பர் 2006 (UTC)
விஜய், கோபி - பார்க்க Wikipedia பேச்சு:சொல் தேர்வு--Ravidreams 18:37, 13 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] Page Revert
Gopi, Please have a look at பயனர் பேச்சு:உமாபதி#page revert when you have time. --Umapathy 11:55, 17 டிசம்பர் 2006 (UTC)
- முன்னிலையாக்கியமைக்கு நன்றி உமாபதி. நீங்கள் செய்தௌ சரியே. --கோபி 15:34, 17 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] அனைத்தினையும் நீக்குக
கோபிமுடிந்தவரை தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டும் நீங்கல் speed delete போட்ட கட்டுரைகளிற்கு தகவல்கள் கிடைக்கவில்லை அனைத்தினையும் இப்பொழுதே நீக்கக்கோருகின்றேன்.பின்னர் ஏற்படும் பெரிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 16:31, 17 டிசம்பர் 2006 (UTC)
மேலும் தமிழ்த் திரைப்படக் கலை இயக்குனர்கள் பட்டியல்,தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பட்டியல் போன்றனவற்றினையும் தற்சமய்ம் நீக்குக போதிய தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் பின் உருவாக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 16:52, 17 டிசம்பர் 2006 (UTC)