இந்திய மொழி மாற்றி (மென்பொருள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய மொழி மாற்றி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கணினியில் உள்ளீடு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். விஜய் லக்ஷ்மிநாரயணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இதற்கான இணையத்தளத்திலிருந்தோ [1] அல்லது பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
[தொகு] ஆதரவளிக்கும் மொழிகள்
இந்திய மொழி மாற்றி 3.0 தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வடமொழி, ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா மற்றும் பஞ்சாபி மொழிகளை ஆதரிக்கின்றது.