கன்னடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கன்னடம் (Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 280 இலட்சம் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும் இது.
இந்தியாவின் தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று.
இம்மொழியின் எழுத்து வடிவம் அண்டை மாநிலத்தில் பேசப்படும் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து உள்ளது.