விஜயவாடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜயவாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தென் மத்திய இரயில்வேயில் விஜயவாடா இரயில் நிலையமே மிகவும் பெரியதாகும்.
கனகதுர்க்கை கோவில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானி தீவு, கொண்டபள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்கப் தகுந்த இடங்கள் ஆகும்.