பொதுவுடமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுவுடமை பொருளாதார தத்துவத்தின் முக்கிய மூன்று கூறுகள் பின்வருமாறு:
1. உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
2. எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
3. மக்கள் அவரவர்க்கு இயன்றபடி உழைத்து தமக்குரிய சம பொருளாதார பங்கை பெறுவர்.
நடைமுறையில் பொதுவுடமை சர்வாதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலின, உதாரணங்கள் சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.
பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனித தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. அரசிடம் அதிகாரம் குவியப்படுவதால் ஊழல், அதிகார துர்பிரயோகத்திற்கும் இத் தத்துவம் வழி கோலுகின்றது.