நாரினி (புரதம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாரினி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதிநீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன் படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் (platelets) வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரினி ஒன்று.
நாரினி என்னும் புரதப்பொருள் கல்லீரலில் உருவாக்கப் படுகின்றது.