இரத்த உறைதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரத்த உறைதல் (Coagulation) என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும்.
இரத்ததில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க, இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை பைப்ரின்கள் எனப்படும். இவ்வகை நூல் சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகிறது.