சினோசோ அபே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சினோசோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo பிறப்பு: செப்டம்பர் 21 1954) யப்பானிய அரசியல்வாதியாவார். இவர் தற்சமயம் பிரதமர் கொய்சுமி சுனிச்சிரோவின் மந்திரிசபை தலைவராக கடமையாற்றுகிறார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[1] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது என்வே அவர் அடுத்த பிரதமாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் பிரதமராக வரும் தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்டால் இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமராகவும் இருப்பார்.
[தொகு] ஆரம்ப வாழ்க்கை
அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[2]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[3]
[தொகு] ஆதாரம்
- ↑ Shinzo Abe to Succeed Koizumi as Japan's Next Prime Minister Bloomberg
- ↑ Profile: Shinzo Abe பிபிசி செய்திகள்
- ↑ Shinzo Abe the Chief Cabinet Secretary சினோசோ அபேயின் தளம்