கிலோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிலோ ஆனது ஐக்கிய நாடுகள் பயன்படுத்தும் ஒலியியல் அகரத்தில் K ஐக் குறிப்பிடுகின்றது.
கிலோ அனைத்துலக முறையலகுகளில் முறையில் 103 அல்லது 1000 ஐக் குறிப்பிடுகின்றது. எடுத்துக் காட்டாக
- 1000 கிராம் ஒரு கிலோகிராம்
- 1000 மீட்டர் ஒரு கிலோமீட்டர்
- 1000 வாட் ஒரு கிலோவாட்
- 1000 ஜூல் ஒரு கிலோஜூல்
1795 இல் உத்தியோகபூர்வமாகப் பாவனைக்கு வந்தது (இதற்கு முன்னரும் பாவனையில் இருந்தது). இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi"), இருந்து வந்ததாகும்.
[தொகு] கணினியில் இதன் பாவனை
கணினியில் கிலோபைட் ஆனது 210 அல்லது 1024 பைட்டைக்குறிக்கும். இதனால் 1000 இருந்து வேறுபட்டுத்த பலரும் சிறிய k இற்குப் பதிலாகக் K ஐப் பொதுவாகப் பாவிக்கின்றபோதிலும் எல்லாரும் இந்நடைமுறையைப் எல்லாரும் பின்பற்றுவதில்லை.
ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 1000 பைட்களை ஒரு கிலோபைட் என்றே எடுத்துக்கொள்கின்றனரெனினும் விண்டோஸ் 1024 பைட்டையே 1 கிலோபைட்டை என எடுத்துக் கொள்வதால் ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்களின் கூறும் கொள்ளவானது பிழையாகக் கூடுதல் இடவசதியிருப்பதாகக் பிழையான விளக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கிலோபைட்டை 1000 ஆகவோ அல்லது 1024 ஆகவோ கருதினால் வழுவீதம் 2.4% வீதமே இதுவே பின்னர் ரேராபைட்டாகும் போது 10% ஆகின்றது.