ஊடுகதிர் அலைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள்(இலங்கை)) மிகச் சக்தி வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கு வரை.
இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரியக்கம் என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.
மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், விமான தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது.