இராஜஸ்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஜஸ்தான் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகராகும். உதய்ப்பூர், ஜோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். ஹிந்தி இங்கு பேசப்படும் மொழி.
[தொகு] புவியியல்
இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள ராஜஸ்தான், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ராஜஸ்தானின் அண்மையில் உள்ளன. ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது.
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது.
[தொகு] மாவட்டங்கள்
ராஜஸ்தானில் 32 மாவட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் ஏழு பிரிவுகளுள் அடங்கும். அவை பின்வருவன.
- அஜ்மெர்
- பரத்பூர்
- பிக்கானெர்
- ஜெய்ப்பூர்
- ஜோத்பூர்
- கோட்டா
- உதய்ப்பூர்
[தொகு] வெளி இணைப்புகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் ஆட்சிப்பகுதி: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாதர் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |