பேச்சு:அடிப்படை இயற்கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] Algebra - எளிய தமிழ்ச் சொல் என்ன?
--Natkeeran 14:29, 27 ஜூன் 2006 (UTC)
- இயற்கணிதம் என்று பயன் படுத்துகிறார்கள். algebra என்றால் எவ்வளவு விளங்காமல் இருக்கின்றதோ அதே அள்வில் தான் இப்பெயரும் சற்றேக்குறைய உள்ளது. தொடக்க நிலைகளில் குறி எழுத்துக்களைக்கொண்டு கணக்கிடும் ஒரு துறையாகத்தான் இது உணரப்படுகின்றது. மேனிலைகளில், இது நுட்பம் பொதிந்த கருத்துருக்களைக் கொண்டது. பொதுவாக இத்துறை பல்வகையான எண்களால் ஆன கட்டமைப்புகளும் இயக்கத்தொடர்புகளும் ஆகும். மிக மிகச் சிறுவயதில், மிகவும் வருந்ததக்க வகையில், காலமான இளைஞர் 'கால்வா (Galois) அவர்கள் தொடக்கிய கால்வா புலங்கள், மற்றும் குழு (groups), வளையம் (rings), போன்ற கட்டமைப்புகள் கொண்ட்தெல்லாம் இந்த இயற்கணிதத்தில் அடங்கும். --C.R.Selvakumar 14:54, 27 ஜூன் 2006 (UTC)செல்வா
நன்றி.--Natkeeran 15:37, 27 ஜூன் 2006 (UTC)
இலங்கை பாடதிட்டத்தில் கேத்திர கணிதம் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.--kalanithe
- கேத்திர கணிதம் - Geometry
அட்சர கணிதம் - Algebra --Kanags 21:33, 27 ஜூன் 2006 (UTC)
அட்சர கணிதம் என்பது முதல்நிலை algebra வுக்குப் பொருத்தமாக உள்ளது. அதனை தமிழ்ப்படுத்தினால் எழுத்துக் கணிதம் என ஆகும். எழுத்துருக் கணிதம் அல்லது குறியெழுத்துக் கணிதம் எனில் பொருள் இன்னும் சற்று பொருந்தும், ஆனால் சற்று நீளமாகின்றது - பொருள் குழப்பமும் ஏற்படலாம். எனினும் algebra என்பது வெறும் குறியெழுத்துக் கணிதம் மட்டும் இல்லை. மாறிகளைப்பயன்படுத்துவதால், மாறி கனிதம் என்றும் சொல்லலாம். இயற்கணிதம் என பல நூல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன். எனவே இயற்கணிதம் எனப்தையே ஆளலாம். நல்ல சொல் கிடைத்தால் மாற்றுவதில் எனக்கு உடன்பாடே (பிறைக்குறிகளுக்குள் குறிக்கலாம்). --C.R.Selvakumar 02:44, 28 ஜூன் 2006 (UTC)செல்வா
அல்ஜிபிரா ஒரு இந்திய மொழி அல்லது அரேபு மொழி சொல்லாகத்தான் இருக்க வேண்டும். அல்ஜிபிரா ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தும் பொழுது அங்கே எதிர்ப்பு இருந்ததாகவும், இரு குழுக்களாக பிரிந்து பெரும் வாதங்கள் நடந்ததாகவும், இறுதியில் அல்ஜிபிராவின் பயன்பாட்டின் மேன்மையால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எங்கேயோ ஒரு கணித வரலாற்று புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.
மேலும், பரிந்துரைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இயற்கணிதம் பொது பயன்பாட்டில் இருப்பதால் அதை தற்போது பயன்படுத்தலாம். இலங்கை வழக்கை பற்றி குறிப்பு மற்றும் பக்க வழி மாற்று தரலாம். --Natkeeran 04:22, 28 ஜூன் 2006 (UTC)
[தொகு] கலைச் சொற்கள்
நற்கீரன், நீங்கள் பரவலாக எங்குமே வழக்கிலில்லாத பல கலைச் சொற்களைக் கட்டுரைகளில் பயன்படுத்தி வருகிறீர்கள். (எகா. குறுக்கணக்கியல், அப்பூதி). ஏற்கெனவே இந்தியக் கலைச்சொற்கள், இலங்கைக் கலைச் சொற்கள் எனப் பலவிதமான கலைச் சொற்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் புதிய மாற்றுச் சொற்களையும் புகுத்துவது குழப்பத்தைத் தான் விளைவிக்கும். கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் துறைகளிலுள்ள கலைச் சொற்கள் சாதாரணமாக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்கள் உள்ளன. சரியோ தவறோ இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. இல்லாவிடில் கலைச்சொல் பயன்பாட்டில் எவ்வித நியமப்படுத்தலும் (standardization) இல்லாமல் போய்விடும்.
நீங்கள் ஒரு கட்டுரையில் கொடுத்திருந்த இணைப்பு மூலம் இராம.கி யின் வலைப்பதிவிலுள்ள அவரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். கலைச் சொற்கள் தொடர்பாக அவரது சிந்தனைகள் அடிப்படையில் நியாயமானவை. இது தொடர்பான அவரது அணுகுமுறைகளும் பெருமளவுக்குச் சரியான திசையில் அமைந்துள்ளதாகச் சொல்லலாம். எனினும் ஐரோப்பிய மொழி வேர்ச் சொற்களிலிருந்து தொடங்கி தமிழ்ச்சொல் ஆக்க முயல்வது ஆங்கில அல்லது வேறு ஐரோப்பிய மொழிச் சொற்களிலுள்ள உலகப் பார்வைப் பொதிவுகளைத் தமிழ்ச் சொற்களில் புகுத்துவதாகும். இது இயற்கைக்கு மாறானது. தமிழ் தமிழாக வளர்வதற்கும் உதவாது. மேலும் உருவாக்கும் சொற்கள் ஆங்கிலச் சொற்களின் ஒலியமைப்புடன் ஒத்திசைய வேண்டுமென்பதற்கா வலிந்து சொற்களைக் காண முயல்வதும் தேவையற்றது. அவருடைய வலைப்பதிவை வாசிக்கும்போது, பரவலாக வழக்கிலுள்ள பல சாதாரண தமிழ்ச் சொற்களுக்குக்கூட, மாற்றுச் சொற்களைப் (எகா: குமுகாயம், பலுக்குதல்) பயன்படுத்தி எழுதியிருப்பதனால், மலையாளம் போலப் புதிய மொழியொன்று உருவாகிவிடுமோ என்று எண்ணம் ஏற்படுகிறது.
வலைப்பதிவுகளிலும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும் ஒருவர் தனது சொந்தக் கருத்துக்களை எழுதலாம். ஆனால், விக்கிபீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட அறிவுத் திரளை மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. சொந்தக் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் இதில் இடம் பெறுவதில்லை. இதனால், வேறு சொற்கள் பயன்பாட்டில் இல்லாதபோது தவிர, இருக்கும் சொற்களுக்கு மாற்றாக அங்கீகாரம் பெறாத புதுச் சொற்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. Mayooranathan 09:32, 17 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] மயூரநாதனுக்கு மறுமொழி.
விளக்கமான கருத்துக்களுக்கு நன்றி.
குறுக்கணக்கியல் என் சொல் அல்ல, அதை ஒரு அகராதியில் கண்டே எழுதினேன். Abstrct (verb or adverb) என்பதற்கு எண்ணக்கரு என்ற சொல் இருக்கின்றது. ஆனால் அது ஒரு பெயர்ச்சொல். நான் இணையான வினையுரிச் சொல் தேடிய பொழுது கிடைத்ததுதான் அப்பூதியாக = அப் + பூதவியலாக. அதாவது பூதங்கள், ஐந்து பூதங்கள் (நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம்) சேர்ந்த உலகாயுத பொருட்களை குறிக்கும், அப்பூதியாக சிந்திப்பத்து பொருட்களை சாரமல் சிந்திப்பது என்பதை குறிக்கும். இச்சொல் இந்திய தத்துவங்கள் என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மயூரநாதன், நான் கலைச் சொற்களை பொதுவாக மூன்று மூலங்களில் இருந்து பெறுகின்றேன்.
- தமிழ் இணைய பல்கலைக்கழக அகராதி, மற்றும் பிற அகரமுதலிகள்
- என்னிடம் தற்சமயம் சேர்ந்து வரும் துறை சார் தமிழ் நூல்கள் (பொதுவாக இலங்கை Gr 10 - 12)
- இராம.கி, வெங்கட், திண்ணை மற்றும் இணையத்தில் கிடைக்கும் சொற்கள்
நான் இயன்றவரை எளிய பொது பயன்பாட்டில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த முயல்கின்றேன். ஆயினும், எனக்கு எச்சொல்கள் பொதுபயன்பாட்டில் இருக்கின்றன என நிச்சியப்பது கடினமாக இருப்பது உண்மைதான். பல அடிப்படை சொற்களில் கூட தமிழகத்துக்கும் இலங்கைக்கு வித்தியாசம் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் விளக்கம் கருதி நான் இணையத்தில் கண்ட சொற்களை பயன்படுத்துவதுண்டு.
ஐரோப்பிய சொற்மூலத்தில் இருந்து இராம.கி அவர்கள் சொற்களை உருவாக்குவதாக கூறியிருந்தீர்கள், சில சொற்கள் அப்படி தோன்றினாலும் அக்கூற்றை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு புதிய சொற்களை உருவாக்கு புலமை இருக்கின்றது என்று நான் கருதுவதால், நான் அவர் பரிந்துரைகளை ஏற்று சில சந்தர்ப்பங்களில் உபயோகிப்பது உண்டு. ஆரம்பத்தில் குமுகாயம் என்ற சொல்லை இங்கு உபயோகித்தது உண்டு, ஆயினும் சமுதாயம் பரவலாக பயன்படுத்தப்பட்டதால் அச்சொல்லை பயன்படுத்துவதில்லை. (சில கனடா பத்திரிகைகளில் குமுகாயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.) எனினும், குமுகத்துக்கு இணையான ஒரு பொது பயன்பாடு சொல் இருப்பதாக தெரியவில்லை. சமூகமூம் சமுதாயமும் ஒத்த கருத்துடன் தான் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால், Community ஒரு சிறு மக்கள் கூட்டத்தையே குறிக்கும், ஆகையால்தான் அதற்கு ஒரு சொல் தேவை. குமுகம் என்ற இராம.கி யின் பரிந்துரை கிடைத்தது, பயன்படுத்தினேன்.
தமிழ் விக்கிபீடியாவில் ஒரு சொல் பயன்பாட்டில் இருக்குமானால் அதனையே பின்வற்றுவேன் (ex: Sustainability). மாற்று தேடுவது வீண் நேர விரயம். ஆனால் நீங்கள் சொவது போல பல சொற்களுக்கு பரவலான ஒரு மாற்று இருக்கின்றது என ஏற்று கொள்ள முடியவில்லை. ஒரு சில சமயங்களில் மாற்று சொற்கள் இருந்தாலும் அவை முற்றிலும் பொருத்தம் இல்லாமல் இருக்கின்றன.
நான் பொதுவாக சொற்களை உருவாக்குவது இல்லை. அந்தளவு தமிழ் தெரியாது. ஆனால் பல மூலங்களை பாவித்து சொற்களை தேடுவது உண்டு. நான் சொல்ல முனையும் கருத்து விக்கிபீடியாவில் இல்லாவிட்டால் நான் இணைத்துவிடுவேன், வேறு ஒரு நிபுணர் வந்து அக்கருத்தை மேலும் திருத்தி சொல்ல முடியும். எளிய சொற்கள் பொது சொற்கள் இருந்தால் பருந்துரையுங்கள் நான் உடனடியாக மாற்றி எழுதிவிடுகின்றேன். அதற்காக கலைச்சொல் பயன்பாட்டில் ஒரு நியமம் வரும்மட்டும் காத்திருக்க முடியாது. அப்படி நீங்கள் கூறுபது படி நியமம் இருந்தால், அவற்றை எங்கு பெற முடியும் என்று கூறுங்கள், மிக்க மகிழ்ச்சியடைவேன்.
என்ன கூற முற்படுகின்றேன் என்றால், கலைச்சொல் பயன்பாட்டில் ஒரு சொல் பொது பயன்பாட்டில் இருக்கும் என்று எனக்கு தென்பட்டால், எனக்கு அச்சொல்லை பயன்படுத்துவதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், மிக அடிப்படை சொற்களுக்கு கூட எது நியமம் என்பதை கூறுவது கடினமாக இருக்கின்றது. உதாரணமாக: function என்ற எண்ணக்கரு கணிதத்தில் மிகவும் முக்கியம். இலங்கையில் அதை சார்பு என்று குறிப்பிடுகின்றார்கள். சில அகராதிகளில் செயற்கூறு, செயலி என்று குறிப்பிடுகின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் எனக்கு செயலி என்பது பொருத்தமாக தெரிவதால், செயலி என்பதை பயன்படுதுகின்றேன். சில சந்தர்ப்பங்களில் செயற்கூறு என்பதையும் பயன்படுத்துவேன். ஆனால், இலங்கையில் வழக்கமாக இருக்கும் சார்பு எனக்கு function என்பதைன் கருவை உணர வைப்பதாக இல்லை.
மயூரநாதன், நான் என்ன கூற முற்படுகின்றேன் என்றால், ஒரு நல்ல பொது பயன்பாட்டு சொல் இருக்கு பொழுது அதையே பயன்படுத்துகின்றேன். சில சமயங்களில் நான் அவற்றை அறியாமல் இருப்பது என் குறையே, பிற பயனர் சுட்டினால் உடனே மாற்றி விடுவேன். ஆனால் பல சொற்களுக்கு எது நியமாக்கப்பட்ட சொல் என்பதை அறியமுடியாமல் உள்ளது.
நான் தேடிய வரையில் தமிழ் சொற்கள் கிடைக்கா பட்சத்தில்தான், நான் கூற எடுத்க்கொண்ட விடத்துக்குகேற்ற ஒரு தலைப்பை எனது கணிப்பில் இடுகின்றேன். பொதுவாக, அக்கருத்துடன் தொடர்புடைய ஆங்கில விக்கி பிற இணைப்புகளையும் இட்டுவிடுவேன். பிறர் வந்து அத்தலைப்பை ஆட்சோபித்தால் மாற்றுவதற்கு தமிழ் விக்கிபீடியாவில் அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வசதிகளும் உண்டு, ஆகவே இச்செயல்பாட்டை த.வி. பலவீனாமகா கருதவில்லை, மாற்றாக பலமாகத்தான் கருதுகின்றேன். உதாரணாமாக நான் சமீபத்தில் எழுதிய குறுங்கட்டுரைகளை அல்லது பகுப்புகளை நோக்குக:
- Deconstruction - வீழ்கட்டமைப்பு (I admit, this is a risky term)
- Appropriate technology - தகுதொழில்நுட்பம் (தகுந்த + தொழில்நுட்பம்)
- Sustainable development engineering - தாங்குவளர்ச்சி பொறியியல் (I used parts of the terms that you used: "தாங்கும் தன்மை கொண்ட (Sustainable)", intutive!)
- Environmental Studies - சூழலியல் (I believe this is the common term.)
- Social Enterprise - சமுதாய தொழில்முனைவகம் (any other suggestions!!!, we can discuss it in the talk pages)
- Plastics Technology - குழைவியல் தொழில்நுட்பம் (tvu)
Etc.
இவற்றுக்கு பொது பயன்பாட்டு சொற்கள் இருக்கின்றனவா?
இங்கிருக்கும் புத்தக கடை ஒன்றில் சமீபத்தில் சில இலங்கை துறை சார் நூல்களை பெற முடிந்தது. ஆனால் அவை தமிழக வழக்கத்தில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வேறு பட்டே நிற்கின்றன. தமிழை ஒழுங்கே கற்காத எனக்கு, ஏன் பிறருக்கும் கூட இந்த சொற் தேர்வு ஒரு சவாலகவே இருக்கின்றது.
மயூரநாதன், உங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கின்றேன். நான் கணிதத்தில் அதிகம் பகிர விரும்பினாலும், அத்துறையை (அல்லது எந்த துறையையோ) நான் தமிழில் மேற்கல்வி கற்கவில்லை என்பதால் அவதானத்துடந்தான் எழுதுகின்றேன். சில ஆங்கில உலகில் பரவலாக இருக்கும், எனக்கு சற்று பரிச்சியமான, ஆனால் தமிழ் சூழலில் சற்று "நவீன" எண்ணக்கருகளை பகிர முற்படும்பொழுது நான் சற்று கூடிய risk எடுக்கின்றேன். வேறு எப்படி செயல்படுவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு சமயம், இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபாடு மிக குறைவு, எனவே உங்கள் பரிந்துரைகளை எதிர் நோக்குகின்றேன்.
இறுதியாக, நான் தமிழில் கருத்துக்களை பகிர முற்படுகின்றேன். நான் தேடும் பொழுது கிடைக்கும் சொற்களை பயன்படுத்துகின்றேன். பரந்த பயன்பாட்டில் இருக்கும் சொற்களே முதலில் கிட்டும் என்பது என் கணிப்பு. எளிதாக, கருத்து புலப்பட, நுணுக்கமாக, விடய நோக்கில் எழுத வேண்டும், அதுவே குறிக்கோள், அதற்கு உதவும் எந்த ஆலோசனையையும் மேலும் வரவேற்கின்றேன். --Natkeeran 16:43, 17 பெப்ரவரி 2006 (UTC)
அங்கீரக்கப்படாத அறிவு திரள் என்று எதை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? உதாரணங்கள் தர முடியுமா? பொதுவாக, நான் இணையான ஆங்கில விக்கி இணைப்பையும் தந்தே எழுதுகின்றேன். தமிழ் சூழலுக்கு பரிச்சியம் இல்லாத சில குறுங்கட்டுரைகளை எழுதியிருக்கலாம். தனிப்பட்ட ஈடுபாடு, பரிச்சியம் சார்த கட்டுரைகளைத்தான் எழுதுகின்றேன், இயன்றவரைக்கும் விடய நோக்கில்தான் எழுதி வருவதாக நினைத்து இருந்தேன். தவறுகளை கோடிட்டு காட்டினால் திருத்தி கொள்ளலாம். --Natkeeran 17:24, 17 பெப்ரவரி 2006 (UTC)
- நற்கீரன், உங்கள் நியாயமான, நிதானமான மறுமொழிகளுக்கு நன்றி. நீங்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் என நான் உணர்கிறேன். இங்கு எவருமே எதிலுமே நிபுணர்கள் என்று சொல்லிவிடமுடியாது. எல்லோருமே எங்களால் இயன்றதைத் தான் செய்ய முயல்கிறோம். தமிழில் சரியான சொற்களைக் கண்டறிய முடியாமலிருப்பது உங்களுக்கு மட்டும்தான் பிரச்சினை என்றில்லை. நான் எழுதத் திட்டமிட்டிருந்த எத்தனையோ கட்டுரைகள் கிடப்பில் இருக்கின்றன. தேவையான தமிழ்ச் சொற்கள் கிடைக்காத காரணத்தால்.
- அண்மையில் project management பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணினேன். project management என்பதைத் தமிழில் திட்ட மேலாண்மை அல்லது திட்ட முகாமை என்று சொல்லலாம். அப்படித்தான் பரவலாகக் குறிப்பிடுகிறார்கள். project என்பதற்கான வரைவிலக்கணப்படி திட்டம் என்பது சரியான பொருள் தரக்கூடிய சொல்லல்ல. திட்டம் என்ற சொல்லை project, scheme, plan என்பன போன்ற பல சொற்களுக்குரிய மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் விளக்கக் கடுரைகளை எழுதும்போது இவ்வாறு பயன்படுத்த முடியாது. அதனால் அக்கட்டுரை எழுதப்படாமல் இருக்கிறது. நேற்று இராம.கியின் வலைப்பதிவில் project management என்பதற்கு புறத்தெற்று மானவம் என்ற சொற்றொடரைப் பரிந்துரைத்திருந்ததைக் கண்டேன். மேலோட்டமாகப் பார்க்கும்போது this looks great! ஆங்கிலச் சொற்றொடரின் ஒலியமைப்புக்கு இசைவாகவும், literally அதே பொருளைத் தரத்தக்கதாகவும், தமிழின் வேர்ச் சொற்களைப் பயன்படுத்தியும் இவ்வாறு சொற்களை உருவாக்கக்கூடிய இராம.கியின் திறமையைப் பாராட்டாமலிருக்க முடியாது. ஆனாலும் ஒரு முக்கியமான இடத்தில் உதைப்பதுபோல் உணர்கிறேன். Project என்பதற்கான literal meaning வெளியே நீட்டிக் கொண்டிருப்பது என்பதாகும். வழமையாகச் செய்யும் வேலைகளுக்குப் புறம்பான முறையில் செய்யப்படுகின்ற ஒன்று என்ற வகையில் தான் building project, project management என்பவற்றில் வரும் project என்பது வெளியே நீட்டிக்கொண்டிருப்பது என்பதுடன் பொருந்துகிறது. இந்தப் பொருத்தம் உண்மையில் project என்ற சொல் உருவான காலத்தில் அச்சமுதாயத்தின் உலகநோக்கைப் பொறுத்தது (world view). இதே உலக நோக்கு தமிழ் சமுதாயத்துக்கும் பொருந்துமா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த உலக நோக்கே ஒரு சமுதாயத்தின் பண்பாட்டின் அடிப்படை. எனவே புதிய சொற்களை mass production ஆக உருவாக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
- அங்கீகரிக்கப்பட்ட அறிவுத் திரளை மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. சொந்தக் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் இதில் இடம் பெறுவதில்லை. என்று நான் குறிப்பிட்டது நீங்களோ அல்லது வேறு எவராவதோ விக்கிபீடியாவில் எழுதிய எந்தக் கட்டுரையையும் பற்றியல்ல. எந்தக் கலைக்களஞ்சிய வடிவத்தினதும் பொதுவான நெறிமுறையைக் குறித்துத் தான். நீங்களோ அல்லது வேறெவரோ விக்கிபீடியாவில் எழுதும் கட்டுரைகளில் குறைபாடு இருக்குமானால் அதை நேரடியாகவே நான் எடுத்துக்கூறுவேன். இப்போதைக்கு அவ்வாறு எதுவும் இல்லை. நாங்கள் இங்கே பங்களிப்பது ஒரே குழு என்ற உணர்வோடுதான். இதில் ஒருவர்மீது ஒருவர் குற்றம் குறை காண்பது என்பதற்கு இடம் இல்லை. கருத்துக்களைக் கூறுவது எங்களுடைய பங்களிப்புக்களின் தரத்தைக் கூட்டுவதற்காகத்தான். அதுபோலவே என்னுடைய கட்டுரைகளிலிருக்கும் குறைபாடுகளையும் மற்றவர்கள் எடுத்துச் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பேன். Mayooranathan 18:44, 17 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] மயூரநாதன், உங்கள் பதில்குறிகளுடன் பூரணமாக ஒத்துபோகின்றேன்.
மயூரநாதன், உங்கள் பதில்குறிகளுடன் பூரணமாக ஒத்துபோகின்றேன். இராம.கி அவர்களின் எல்லா சொற்களும் தகுந்தது என்று கொள்ள முடியாது. ஆனால், அவர் போல் புலமைகொண்டவர்களால் ஒரு சிறு குழு ஒன்று இணையத்தில் இருந்து அவ்வவ்போது பரிந்துரைகள் வழங்கினால் நன்றாக இருக்கும். சொற்கள் mass production போது கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக விக்கிபீடியாவில் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆகவே, இனிமேல் பின்வரும் குறிப்பை உரையாடல் பகுதியில் சேர்க்கலாம் என்று இருக்கின்றேன்.
Elementary Algebra, Abstract (verb or adverb)...தகுந்த பொது பயன்பாட்டு சொற்கள் யாது? |