நைசின் விசுவாச அறிக்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), நைசின் நம்பிக்கை இயம்பும் உறுதிமொழி என்பது கிறிஸ்தவத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளபடும் முக்கியமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் அறிக்கையாகும். இது கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், ஆசிறியன், லூதரன், சீர்திருத்தர்கள் மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திவ்விய திருப்பலியின் போது உச்சரிக்கப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாலம்,விசுவாசத்தின் மறைப்பொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
[தொகு] நைசின் மூல விசுவாச அறிக்கை கி.பி.325
முதலாவது நைசின் விசுவாச அறிக்கையானது கி.பி.325 ஆம் அண்டு கூட்டப்பட்ட நைசியா மன்றம்I இனால் முடிவு செய்யப்பட்டது.நைசியா மன்றம்I அனாது திருச்சபையின் சகல ஆயர்களும் கலந்து கொண்ட மன்றமாகும் (Ecumenical Council). இதன் போது ஏற்றுக்கொள்ள்ப்பட்ட விசுவா அறிக்கயானது "பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேம்" என்ற சொல்லுடன் முற்றியது.
நைசியா மன்றம்I முற்றிய உடனேயே விசுவாச அறிக்கையை புதுப்பிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்போது அரியவாத்தின்(Arian heresy) புது தர்க்கங்களின் முன் புதியதோர் விசுவாச அறிக்கைகான தேவயேற்பட்டது.
[தொகு] நைசின் கி.பி. 381 விசுவாச அறிக்கை
திருச்சபையின் சகல ஆயர்களும் கலந்து கொண்ட இரண்டாம் சர்வ ஆயர் மன்றம் 381 (First Council of Constantinople) ஆம் ஆண்டு கூடி விசுவாச அறிக்கையின் மீத்முள்ள வசனங்களையும் இணைத்ததது.இவ்வறிக்கையானது கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் மற்றும் கிரேக்க கத்தோலிக்க திருச்சபைகளும் இத்னை மாற்றமின்றி பயன்படுத்துகின்றன.
மூன்றாம் சர்வ ஆயர் மன்றம் (Council of Ephesus) 431 ஆம் ஆண்டு கூடியது.இச்சபையின் முடிவில் 381 ஆண்டிண் விசுவாச அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் விசுவா அறிக்கை இனிமாற்றம் செய்யமுடியாதது எனவும் முடிவு செய்தது.
[தொகு] 325 மற்றும் 381 விசுவாச அறிக்ககளிடையான வேறுபாடுகள்
[தொகு] விசுவாச அறிக்கை
- பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்.
- அவருடைய ஏகசுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.
- இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
- போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
- பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
- பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
- அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.
- பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன்.
- ஏக,பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவாசிக்கிறேன்.
- புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவாசிக்கிறேன்.
- பாவப்புறுத்தலை விசுவாசிக்கிறேன்.
- நித்திய சீவியத்தை விசுவாசிக்கிறேன்.
-- ஆமென்.