தென் அமெரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென் அமெரிக்கா ஒரு கண்டம். இக்கண்டத்தின் மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. இது உலகின் தென்பாதி உருண்டைப் பகுதியில் அமைந்த கண்டமாகும். ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இத்தென் அமெரிக்காவுமே நிலவுருண்டையின் தென் பாதியில் அமைந்த பெரு நிலப்பகுதிகள். இப்படி நில உருண்டையின் தென்பாதிப் பகுதியில் இத்தென் அமெரிக்காவுக்கு நேர் பின்னுள்ள இன்னொரு நாடு அவுஸ்திரேலியா ஆகும். தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது. இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்கள் வசிகிறார்கள் (1991ன் கணக்குப் படி). இக் கண்டத்திலே மிகப்பெரும்பாலோர் இலத்தீன் மொழிவழி தோன்றிய ஸ்பானிய மொழி பேசுவதால், இத் தென் அமெரிக்காவை. இலத்தீனிய அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி பேசப்படுகிறது.
[தொகு] நாடுகள்
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள்
- பிரேசில்
- கயானா
- சுரினாம்
- பிரென்ச்சு கயானா
- பராகுவே
- உருகுவே
- அர்ஜென்டினா
- பெரு
- சிலி
- ஈக்குடோர்
- வெனிசூலா
- கொலம்பியா
பூமியின் கண்டங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆப்பிரிக்கா |
அண்டார்டிக்கா |
ஆசியா |
ஆஸ்திரேலியா |
ஐரோப்பா |
வட அமெரிக்கா |
தென் அமெரிக்கா |
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும் | |
அர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · ஈக்வெடார் · கயானா · பனாமா* · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் * · உருகுவே · வெனீசூலா | |
சுதந்திரமற்றவை: அருபா (ஒல்லாந்து )* · போக்லாந்து தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) · பிரெஞ்சு கினீயா · நெதர்லாந்து அண்டிலிசு* · தெற்கு யோர்சியா மற்றும் தென் சன்விச் தீவுகள் ( ஐக்கிய இராச்சியம் ) |
|
* வேறு இடங்களில் வட அமெரிக்காவோடு சேர்த்து நோக்கப்படும் |