சீன குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
中華民國 ஜொங்குவா மின்கியோ சீன குடியரசு |
|
குறிக்கோள்: கிடையாது | |
நாட்டு வணக்கம்: "சீன குடியரசின் நாட்டு வணக்கம்" | |
தலைநகரம் | தைபே |
பெரிய நகரம் | தைபே |
ஆட்சி மொழி(கள்) | மண்டரின் |
அரசு | அரை-அதிபர் முறை |
- அதிபர் | ச்சென் சுயி-பியான் |
- உப-அதிபர் | அனத்தே லூ |
- பிரதமர் | சூ ட்செங் ச்சாங் |
நிறுவுதல் | சின்கய் புரட்சி |
- அறிவிப்பு | ஒக்டோபர் 10, 1911 |
- அமைப்பு | ஜனவரி 1, 1912 |
- தாய்வானுக்கு செல்லுதல் | டிசம்பர் 7, 1949 |
பரப்பளவு | |
- மொத்தம் | 35,980 கி.மீ.² (137வது) |
13,892 சதுர மைல் | |
- நீர் (%) | 2.8 |
மக்கள்தொகை | |
- June 2006 மதிப்பீடு | 22,814,636 (47th 2) |
- அடர்த்தி | 640/கிமி² (14வது 1) 1,658/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $631.2 பில்லியன் (16வது) |
- ஆள்வீதம் | $27,600 (24வது) |
ம.வ.சு (2003) | 0.910 (25வது 2) – உயர் |
நாணயம் | புதிய தாய்வான் டொலர் (NT$) (TWD ) |
நேர வலயம் | சுங்கியான் சீர் நேரம் (ஒ.ச.நே.+8) |
இணைய குறி | .tw |
தொலைபேசி | +886 |
1.) 2005 தரவுகளின் படியானது. 2.) சீன குடியரசின் அரசியல் நிலை காரணமாக ஐநா மனித வளர்ச்சி சுட்டெண்ணை கணிக்க வில்லை. எனினும் சீன குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது.[1] |
சீன குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீன பெருநிலப்பரப்பின் ஆட்சியை மக்கள் சீன குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீன குடியரசானது தாய்வான் என்றே அழைக்கப்பட்டது. 1970 களின் பின்னர் "சீனா" என்பது மக்கள் சீன குடியரசை குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீன குடியரசானது சீன தைபே என அழக்கப்படலாயிற்று.
சீன குடியரசானது 1912 இல கடைசி சீன அரசவம்சமான கின் அரச வம்சத்தை நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு 2000 வருட பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது. ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் யப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்முயுனிச கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீன குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கன்முயுனிச கட்சி 1949 பீஜிங்கில் மக்கள் சீன குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே 1970கள் வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது.
1928 முதல் சீன குடியரசானது சீன தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபயாமும் குழப்பநிலையு தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சிக்கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான சனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி 1996 இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார்.