சிங்களத் திரைப்படத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்களவர் பண்பாடு |
மொழி |
சிங்களத் திரைப்படத்துறை என்பது இலங்கையில் வாழும் சிங்களவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு துறையாகும். பல தத்ரூபங்கள் அமையப்பெற்ற சிங்களத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு விருதுகளைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] வரலாறு
1925 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ராஜாகீய விக்ரமாயா (Royal adventure) முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்ட கடவுனு பொறொண்டுவ (The Broken Promise) திரைப்படமே முதன் முதலில் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் துறையினரால் வெளியிடப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டு சிரிசேன விமலவீர வெளியிட்ட அம்மா என்ற அவரது முதற் திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வெளியிட்ட ரேகவா (The Line of Destiny) திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய கம்பெரலிய (Changing Village) டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான நிதனய (Treasure)திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன.
- 1960 ஆம் ஆண்டுகளில் காமினி பொன்சேக,டைடஸ் டொடவத்தே மற்றும் ஜி.டி.எல் பெரேரா போன்றவர்கள் சிங்களத் திரைப்படத்துறையினை வளர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1970 ஆம் ஆண்டுகளிலில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினால் சிங்களத் திரைத்துறையும் வளர்ச்சியினை எட்டியது.இக்காலகட்டத்தில் தர்மசேன பதிராஜ,வசந்த ஒபேய்சேகெர போன்றவர்களில் படைப்புகளும் சிங்களத் திரைத்துறைக்குப் பெரிதும் பலம் சேர்த்தது.
- 1977 ஆம் ஆண்டின் பொருளாதார சட்டமைப்புகளினால் இந்திய மற்றும் வெளிநாடுகளின் படைப்புகள் பெரிதும் வரவேற்கப்பட்டு தொலைக்காட்சி சேவைகளின் அதிகரிப்பும் ஏற்பட்டது.
- 1983 இனக் கலவரங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்பு சிங்களத் திரைத்துறை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.மேலும் இச்சரிவினைச் சரிபடுத்தும் நோக்குடன் சில இயக்குநர்கள் சிங்களப் பாலியல் சார் படங்களை
இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
- 1990 ஆம் ஆண்டுகளில் இளம் இயக்குநர்களிடமிருந்த சிறந்த படைப்பாளிகள் உருவாகினர்.இவர்களுள் பிரசன்ன விதானகே குறிப்பிடத்தக்கவராவார்.இவர் இயக்கிய நான்காவது திரைப்படமான புர ஹந்த கலுவர (Death On a Full Moon Day) திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அமியென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இவரால் இயக்கப்பட்ட அக்சரயா திரைப்படம் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது.